முன்தேர்தல் வாக்குறுதிகளுக்கு பின்னால் மறையும் வேலைவாய்ப்புகள்: ஹரியானாவில் 8,000 பணியிடங்கள் ரத்து – சுர்ஜேவாலா கடும் குற்றச்சாட்டு
ஹரியானாவில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட 8,653 அரசு வேலைவாய்ப்புகளுக்கான அறிவிப்புகளை பாஜக அரசு தேர்தலுக்குப் பிறகு ரத்து செய்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா குற்றம்சாட்டியுள்ளார். கடந்த வியாழக்கிழமை (ஜூன் 19) வெளியிட்ட தனது சமூக ஊடகப் பதிவிலும் ஊடகங்களிடம் அளித்த பேட்டியிலும், “இது இளைஞர்களை ஏமாற்றும் மோசமான அரசியல்