ஓய்வுக்குப் பின் அரசுப் பதவி இல்லை: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தலைமை நீதிபதி கவாய்!
இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், இந்த ஆண்டு நவம்பர் மாதம் தனது பதவியில் இருந்து ஓய்வுபெற உள்ள நிலையில், ஒரு மிக முக்கியமான மற்றும் வரவேற்கத்தக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஓய்வுக்குப் பிறகு எந்த ஒரு அரசுப் பதவியையும் தான் ஏற்க மாட்டேன் என்று அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார். வழக்கமாக, ஓய்வுபெறும் நீதிபதிகள் அரசுப் பதவிகளை ஏற்பது