மாட்டிக் கொண்டாரா பெரியார்? (22)

மாட்டிக் கொண்டாரா பெரியார்? (22)

Mar 12, 2025

தந்தை பெரியார் மீது சீமான் பரப்பிய அவதூற்றை மறுக்குமுகத்தான் இந்த இடுகைத் தொடரை எழுதத் தொடங்கினேன். ஆனால் இடைக்காலத்தில் அன்பர்கள் இட்ட பின்னூட்டங்களால் இந்த உரையாடல் சற்றே திசைமாறிப் போய் விட்டது. மார்க்சின் பால் நேசமும் மார்க்சியத்தின் பால் நாட்டமும் கொண்ட சில தோழர்கள் மார்க்ஸ் அல்லாத முற்போக்குச் சிந்தனையாளர்களையும் மார்க்சியமல்லாத சிந்தனை மரபுகளையும் அறிந்தேற்க மறுப்பதாக எனக்குத் தோன்றியது.

Read More

Mar 6, 2025

பொதுமைக் கொள்கையை ஏற்று வாழ்தல் சிறப்பானது. அறிவியல் நோக்கிலான பொதுமைக் கொள்கையாகிய மார்க்சியத்தைப் பற்றி நிற்கிற எவரும் அது குறித்துப் பெருமை கொள்வது சரியானது, முறையானது. இது அறமும் அறிவும் சார்ந்த பெருமை, ஆனால் அடக்கத்தை உதறி விட்டுத் தானே சரி, தான் மட்டுமே சரி என்று மமதை கொள்வதற்கு இது நியாயமாகாது. மார்க்சியம் அதனளவில் முக்காலும் பொருந்தும் பேறுடைத்த

Read More
மாட்டிக் கொண்டாரா பெரியார்? (18)

மாட்டிக் கொண்டாரா பெரியார்? (18)

Feb 27, 2025

[இந்த இடுகைத் தொடரில் தவிர்க்கவிய்லாத பணிகளால் சற்றே நீண்ட இடைவெளி விழுந்தமைக்காக வருந்துகிறேன். எதிர்காலத்தில் இவ்வளவு நீண்ட இடைவெளி ஏற்படாமல் பார்த்துக் கொள்வேன்.] மார்க்சியத்தின் வல்லமை குறித்தும், அதன் வரலாற்று வழிப்பட்ட வரம்புகள் குறித்தும், ஏனைய புரட்சியக் கொள்கைகளுடன் அதற்குள்ள உறவு குறித்தும் என் பார்வைகளில் மாற்றமில்லை என்று ஒரே வரியில் சொல்லி விட்டுப் போக நான் விரும்பவில்லை. தோழர்

Read More
மாட்டிக் கொண்டாரா பெரியார்? (17)

மாட்டிக் கொண்டாரா பெரியார்? (17)

Feb 24, 2025

”மார்க்சியம் மந்திரக் கோலன்று. மார்க்சியர்கள் மந்திரவாதிகளும் அல்லர். மார்க்சியம் உலக அரங்கில் வருகை தருமுன்பே மாந்த குலம் போராட்டங்களையும் புரட்சிகளையும் நடத்திக் கொண்டுதான் இருந்தது. பார்க்கப் போனால் அந்தப் போராட்டங்களின் இயங்கியல் தொடர்ச்சியாகவே மார்க்சியம் மலர்ந்தது. மார்க்சியம் அனைத்து நோய்களுக்குமான அறுதி மருந்தன்று. சர்வரோக சஞ்சீவி எதுவும் இல்லை. //”அறிஞர்கள் உலகை விளக்கிக் கொண்டிருந்த போது உலகை மாற்றுவதே குறி

Read More
மாட்டிக் கொண்டாரா பெரியார்? (15)

மாட்டிக் கொண்டாரா பெரியார்? (15)

Feb 17, 2025

இந்த இடுகைத் தொடரில் 12ஆம் இடுகைக்குப் பின்னூட்டமாக வந்த பின்வரும் இடுகையை நீங்கள் படித்திருக்கக் கூடும். // தோழர் தியாகு, நீங்கள் அறிவாளி தான் நான் ஏற்கிறேன்.எனக்கு சில கேள்வி உள்ளன கேட்கட்டுமா? // 1. மார்க்சியம் முதலாளித்துவ ஆளும்வர்க்க அரசை ஆதரித்து அதற்காக செயல்படுமா? அப்படி செயல்படும் கட்சிகளை உயர்த்திப் பிடிப்பது மார்க்சியம் ஆகுமா? // சமூக நீதி

Read More
மாட்டிக் கொண்டாரா பெரியார்? (14)

மாட்டிக் கொண்டாரா பெரியார்? (14)

Feb 15, 2025

தந்தை பெரியார் மீது சீமான் பரப்பிய அவதூறு, தன் குற்றாய்வுக்குச் சான்று காட்ட முடியாத நிலையில் அவர் அள்ளிச் சிதற விட்ட பழிதூற்றல்கள், திடீரென்று தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனையும் பெரியாரையும் மோத விட்ட தீச்செயல், இதுதான் வாய்ப்பென்று சீமானுக்கு சப்பைகட்டும் சாக்கில் பெரியார் புகழை சிதைக்கக் கிளம்பிய தோழர் பெ. மணியரசனின் முன்னுக்குப் பின் முரணான வாதுரைகள், அம்பறாத்

Read More
மாட்டிக் கொண்டாரா பெரியார்? (12) சீமானின் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்!

மாட்டிக் கொண்டாரா பெரியார்? (12) சீமானின் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்!

Feb 14, 2025

நாதக சீமானையும் தோழர் பெ.மணியரசனையும் அவர்கள் தரப்பினரையும் இந்த அளவுக்கு மதித்து மறுப்பெழுத வேண்டுமா? என்று சில அன்பர்கள் கேட்கின்றார்கள். ஒருசிலர் அவ்வாறே பின்னூட்டத்திலும் எழுதுகிறார்கள். சீமானைப் பற்றித்தான் தெரிந்து விட்டதே, அவரை மதித்து இவ்வளவு மறுப்பெழுத வேண்டுமா? என்று கேட்கின்றார்கள். அவரை நானோ நீங்களோ நம்பவில்லை என்பது போதாது, அவரை நம்பக்கூடியவர்கள் இப்போதும் இருக்கிறார்கள், அவர்களுக்கும் உண்மையை உணர்த்தி

Read More
மாட்டிக் கொண்டாரா பெரியார்? (11) சீமானின் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்

மாட்டிக் கொண்டாரா பெரியார்? (11) சீமானின் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்

Feb 14, 2025

[ஒரு கிழமைக் காலமாய்ப் பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ள ஊர் ஊராகப் பயணம் செய்து கொண்டிருந்ததால் இந்த இடுகைத் தொடரில் இடைவெளி விழுந்து விட்டது. இனி நாள்தோறும் எழுதுவேன்.] நாதக சீமான் தந்தை பெரியார் பற்றி முழுக்க அவதூறாகப் பேசி 20 நாள் ஆயிற்று. அவர் சான்றேதும் தரவில்லை, செய்த அவதூறுக்காக மன்னிப்பும் கேட்கவில்லை என்பது மட்டுமின்றி மென்மேலும் பெரியாரை

Read More
மாட்டிக் கொண்டாரா பெரியார்? (10) சீமானின் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இதுகைத் தொடர்!

மாட்டிக் கொண்டாரா பெரியார்? (10) சீமானின் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இதுகைத் தொடர்!

Feb 12, 2025

நாதக சீமான் தந்தை பெரியார் பற்றி முழுக்க அவதூறாகப் பேசி 17 நாளாயிற்று. தன் குற்றச்சாட்டுக்கு அவர் சான்றேதும் தரவில்லை. “உங்களிடம்தான் அது இருக்கிறது” என்று கவுண்ட மணி – செந்தில் வாழைப்பழக் கதையைப் போல் கதை விட்டுச் சிரிப்பு மூட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால் தான் செய்த அவதூறுக்காக அவர் வருத்தம் தெரிவிக்கவும் இல்லை. சீமான் பேசியதற்கு நான் சான்று

Read More
மாட்டிக் கொண்டாரா பெரியார்?சீமானின் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்!

மாட்டிக் கொண்டாரா பெரியார்?சீமானின் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்!

Feb 11, 2025

“…உன் இச்சையைத் தீர்த்துக் கொள்ள தாய், அக்காள் தங்கை, மகள் யாருடன் வேண்டுமானாலும் உடலுறவு வைத்துக் கொள்ளலாம்” என்று பெரியார் சொன்னதாக சீமான் ஊடகர்களிடம் பேசி 16 நாளாயிற்று. இது வரை இதற்கு அவர் எவ்விதச் சான்றும் தரவில்லை. சான்று எங்கே? என்று கேட்டவர்களிடம் “அது உங்களிடம்தான் இருக்கிறது, நீங்கள்தான் எடுத்துக் கொடுக்க வேண்டும்” என்று குதர்க்கம் செய்தார். பெரியார்

Read More