ரஷ்யாவுடன் வர்த்தகம்: இந்தியா, சீனா மீது 500% வரி விதிக்க அமெரிக்கா திட்டம்? – டிரம்ப் ஆதரவு
ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்யும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது 500% வரை இறக்குமதி வரி விதிக்க வகை செய்யும் புதிய மசோதாவை அமெரிக்க செனட்டில் முன்மொழிய திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மசோதாவுக்கு முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரவளிப்பதாக குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாம் ஏபிசி நியூஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
