தந்தை கண்முன்னே 13 வயது மகனைச் சுட்டுக் கொன்ற இஸ்ரேல் படை – மேற்கு கரையில் பதற்றம் அதிகரிப்பு
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. பாலத்தீன மக்கள் தங்கள் சொந்த நிலத்திலேயே கடுமையான ஆக்கிரமிப்புகளையும், வன்முறையையும் எதிர்கொள்கின்றனர். சமீபத்தில், ஜெனின் அகதிகள் முகாமின் நுழைவாயிலில், 13 வயது சிறுவன் இஸ்லாம் தனது தந்தை அப்தெல் அஜீஸ் மஜர்மே கண்முன்னே இஸ்ரேலியப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டான். “என் மகன் தரையில் சரிந்தான். ஒரு துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டது.
