தனுஷ் மகன் லிங்கா முதல்முறையாக மேடையில் ஆட்டம்: ‘இட்லி கடை’ இசை வெளியீட்டு விழாவில் நெகிழ்ச்சியான தருணம்
நடிகர் தனுஷ் இயக்கி, நடித்து, தயாரித்து இருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று (செப்டம்பர் 12) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில், படக்குழுவினர்கள் மற்றும் தனுஷின் குடும்பத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டனர். இது தனுஷின் 52வது திரைப்படமாகும். படத்திற்கு இசையமைத்துள்ள ஜி.வி. பிரகாஷ் குமார் உடன் மேடையில் இருந்த
