மேகதாது அணை எதிர்ப்பு: டெல்லி செல்லும் வழியில் தமிழ்நாடு விவசாயிகள் கைது; உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தல்
மேகதாது அணைத் திட்டத்தை எதிர்த்து டெல்லியில் முற்றுகைப் போராட்டம் நடத்தச் சென்ற தமிழ்நாட்டு விவசாயிகளை, மகாராஷ்டிர மாநிலத்தின் நாக்பூரில் காவல்துறையினர் கைது செய்திருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், மேகதாது அணை விவகாரத்தில் தொடக்கம் முதலே கர்நாடகாவுக்கு ஆதரவாக மத்திய நீர்வளத்துறை ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே தமிழ்நாட்டு விவசாயிகள் டெல்லியில்
‘மிகவும் கவலைக்குரியது’: நாக்பூரில் மலையாளி பாதிரியார் கைது குறித்து கேரள முதல்வர்
நாக்பூரில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பிரார்த்தனைக் கூட்டத்தில் கட்டாய மதமாற்றம் செய்ததாகக் கூறி, சிஎஸ்ஐ (CSI) சபையைச் சேர்ந்த மலையாளி பாதிரியார், அவரது மனைவி மற்றும் 10 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கைக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் திருச்சபை அதிகாரிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். திருவனந்தபுரம் மாவட்டம் அமரவிளையைச் சேர்ந்த பாதிரியார் சுதிர்,
