ராகுல் காந்தியின் வாக்குப்பதிவு முறைகேடு ஆதாரங்கள்: தேர்தல் ஆணையம் விழித்துக்கொள்ளுமா?
பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதிக்குட்பட்ட மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் உள்ள வாக்காளர் பட்டியலில் உள்ள முக்கிய முறைகேடுகள் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட தகவல்கள், ஒரு பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஆறு மாத கால உழைப்புக்குப் பிறகு, காங்கிரஸ் குழு சேகரித்த ஆதாரங்கள், தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமை குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளன. மகாதேவபுரா தொகுதியின் மர்மம்