“பாஜகவின் முடிவு ஆரம்பமாகிறது” – ராகுல் காந்தியின் அடுத்தகட்ட போர்!
“பாஜகவின் முடிவு ஆரம்பமாகிறது” என்ற முழக்கத்துடன், 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் ஹரியானா, மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல்களில் நடந்ததாகக் கூறப்படும் “வாக்குத் திருட்டு” (Vote-Chori) குறித்த அடுத்தகட்ட தரவுகளை வெளியிட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தயாராகி வருவதாகத் தெரிகிறது. இது, இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் (ECI) ஆளும் பாஜகவிற்கும் எதிரான அவரது போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
