யோகேந்திர யாதவ் உச்ச நீதிமன்றத்தில் ‘இறந்த வாக்காளர்களை’ முன்னிறுத்தினார்; தேர்தல் ஆணையம் ‘நாடகம்’ என்றது !
புது டெல்லி: பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த (Special Intensive Revision – SIR) நடவடிக்கையை எதிர்த்து மனு தாக்கல் செய்தவர்களில் ஒருவரான சமூக ஆர்வலர் யோகேந்திர யாதவ், உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 12) ஒரு பரபரப்பான காட்சியை அரங்கேற்றினார். தேர்தல் ஆணையத்தால் ‘இறந்துவிட்டதாக’ அறிவிக்கப்பட்ட இரண்டு வாக்காளர்களை அவர் நீதிமன்றத்தில் நேரடியாக