நியூ இந்தியா – அமெரிக்கா CHATGPT, கூகுள் GEMINI, சீனா DEEPSEEK, இந்தியா COW URINE
உலகமே மிக வேகமாக செயற்கை நுண்ணறிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் மோது இந்தியாவில் மட்டும் மாட்டு கோமியமும், பாபா ராம்தேவ்களும், ஜக்கி வாசுதேவ்களும், கும்ப மேளா மரணங்களும், ராமர் கோவில் கதைகளும் பேசுபொருளாக மட்டுமில்லாமல் வாழ்வியல் முறையாகவும் இருந்து வருகிறது இது எப்படி சாத்தியம் ?? இந்தியாவை ஒரு நாடாக பார்ப்பதைவிட துணை கண்டமாக பார்த்தால் இதற்கு பதில் கிடைக்கும்.
நம்பர் 1 திராவிட மாடல் ஆட்சி! அதற்கு தமிழ்நாட்டின் மின்சார வாகன உற்பத்தியே சாட்சி!
தமிழ்நாட்டில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட மஹிந்திராவின் அதிநவீன எஸ்.யு.வி (SUV) கார்களை நேற்று (13/01/2025) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வெளியிட்டது மஹிந்திரா நிறுவனம். இந்த கார்களை தமிழ்நாடு அரசுப் பள்ளி, கல்லூரிகளில் தமிழ் வழியில் பயின்ற, திரு. வேலுச்சாமி உள்ளிட்ட சிறந்த பொறியாளர்கள் வடிவமைத்துள்ளனர். “மின்சார வாகனங்கள் தொடர்பான ஆராய்ச்சிகள் தமிழ்நாட்டில் தான் நடைபெற வேண்டும் என்பது தான் முதலமைச்சரின் நோக்கம்.