“முஸ்லிம்கள் ராமரின் வழித்தோன்றல்கள்” – சனாதன தர்மத்துடனான ஒற்றுமையை வலியுறுத்தும் பாஜக சிறுபான்மை மோர்ச்சா தலைவர் ஜமால் சித்திக்
பாஜகவின் சிறுபான்மை மோர்ச்சாவின் தேசியத் தலைவர் ஜமால் சித்திக், சமீபத்தில் தனியார் பத்திரிகையிடம் அளித்த பேட்டியில், சனாதன தர்மம் மற்றும் இஸ்லாத்துக்கிடையிலான ஆழமான கலாச்சார மற்றும் இறையியல் ஒற்றுமைகளை விவரித்தார். இந்திய நாகரிகத்தின் அடித்தளமான சனாதன பாரம்பரியம், இஸ்லாமிய வரலாறு மற்றும் மதத்தோற்றத்துடன் பிணைந்துள்ளது என அவர் வலியுறுத்தினார். “சனாதன தர்மம் இஸ்லாத்துக்கு முந்தையது. அது நம் நாகரிகத்தின் அடிப்படை,”