மாட்டிக் கொண்டாரா பெரியார்? (14)
தந்தை பெரியார் மீது சீமான் பரப்பிய அவதூறு, தன் குற்றாய்வுக்குச் சான்று காட்ட முடியாத நிலையில் அவர் அள்ளிச் சிதற விட்ட பழிதூற்றல்கள், திடீரென்று தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனையும் பெரியாரையும் மோத விட்ட தீச்செயல், இதுதான் வாய்ப்பென்று சீமானுக்கு சப்பைகட்டும் சாக்கில் பெரியார் புகழை சிதைக்கக் கிளம்பிய தோழர் பெ. மணியரசனின் முன்னுக்குப் பின் முரணான வாதுரைகள், அம்பறாத்