கூலி: ‘தெலுங்கு சினிமா கிங்’ டு ரஜினி வில்லன் – ‘ரட்சகன்’ நாகார்ஜுனா சில குறிப்புகள்!
நடிகர் நாகார்ஜுனா தனது கிட்டதட்ட 40 வருட சினிமா பயணத்தில் முதல் முறையாக வில்லன் கதாபாத்திரத்தில் ‘கூலி’ படத்தில் நடித்திருக்கிறார். ரஜினிகாந்த்தால் ‘நாற்பது வருஷங்களுக்கும் மேலா ஒருத்தர் அதே இளமையோட இருப்பது ஆச்சர்யம்தான்’ என்று பாராட்டப்பட்ட நாகார்ஜுனாவின் சினிமா பயணம் குறித்துப் பார்ப்போம். ரஜினியுடன் வில்லன் கதாபாத்திரம்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த், சத்யராஜ், உபேந்திரா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதி