மறக்கப்பட்ட நில உரிமை போராளி – அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயகர் !
இந்திய துணைக்கண்டத்தின் சமய, தத்துவ மரபு வைதீகம் அவைதீகம் எனும் இரு தளங்களில் நீண்டுகொண்டே வந்தது. அந்த அவைதீக மரபில் சாருவகர், மகாவீரர், புத்தர், திருவள்ளுவர், சித்தர்கள், அய்யா வைகுண்டர், வள்ளலார், நாராயண குரு, ஐயங்காளி போன்றோர் மாற்றுச் சிந்தனையைக் கொண்டவர்கள். இந்த வரிசையில் மறக்கப்பட்ட, மறைக்கப்பட்ட ஒரு பெயர் — நில உரிமை போராளி அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயகர்.
