மோடி ஆட்சியில் வங்கி மோசடிகள் பெரிதளவில் அதிகரித்து வருகின்றன: மல்லிகார்ஜுன் கார்கே
புதுடெல்லி: வங்கி மோசடிகளின் எண்ணிக்கையும் அளவும் மோடி ஆட்சியில் கணிசமாக உயர்ந்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, “மோசடி மற்றும் போலித்தனம் மோடி அரசாங்கத்தின் நரம்புகளில் ஓடுகிறது” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். மே 30, 2025, வெள்ளிக்கிழமை, X தளத்தில் பதிவிட்ட அவர், கடந்த 11 ஆண்டுகளில் ரூ.6.36 லட்சம் கோடி மதிப்புள்ள வங்கி மோசடிகள் நடந்துள்ளதாகக் கூறியுள்ளார்.
டிஜிட்டல் பரிவர்த்தனை ஒன்றே வழி; ரூ.500 நிராகரிப்பு அரசியல் வெற்றி தரும்! — கடப்பா TDP கூட்டத்தில் உறுதி
கடப்பா: நமது நாட்டில் இப்போது புழக்கத்தில் உள்ள அதிகபட்ச ரூபாய் நோட்டுகளாக 500 ரூபாய் நோட்டுகள் உள்ளன. இதற்கிடையே கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக ரூ.500 நோட்டுகளை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார். டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துவிட்ட நிலையில், ரூபாய் நோட்டுகளைக் குறைக்கலாம் என அவர் தெரிவித்தார். நமது நாட்டில்