“தபால்காரருக்கு பார்லமெண்ட் அதிகாரமா? – ஆளுநர், மத்திய ஆட்சியுடன் ஸ்டாலின் நேரடி மோதல்”
சென்னை: “ஆளுநரின் அதிகாரம் என்பது மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே தபால்காரராக இருப்பது மட்டுமே” என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆங்கில ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். ஆளுநர்
ஷூட்டிங் ஸ்பாட்ல எழுதி தந்ததை விஜய் படிக்கிறாரு.. எத்தனை தொகுதி இருக்குனு கூட தெரில! அண்ணாமலை தாக்கு
தொகுதி மறுசீரமைப்பு குறித்து தமிழக அரசு நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தைக் கடுமையாக விமர்சித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இந்தியாவில் எத்தனை தொகுதிகள் உள்ளது என்பது கூட தெரியாத தலைவர்களே தொகுதி மறுசீரமைப்பு குறித்துப் பேசுவதாகச் சாடினார். மேலும், விஜய் சினிமா ஷூட்டிங் டயலாக்கை படிப்பதாக விமர்சித்த அண்ணாமலை, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தையும் சாடினார். தொகுதி மறுசீரமைப்பு
தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென் மாநிலங்களை பழிவாங்கும் பாஜக. முன் நின்று துணிந்து போராடும் திராவிட மாடல் முதல்வர்.
2011-ல் நடைபெற்ற கடைசி மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், மக்களவை உறுப்பினர் இடங்களை மீண்டும் ஒதுக்கீடு செய்யும் தொகுதி மறுசீரமைப்பு (Delimitation ) குறித்த விவாதங்கள் இந்தியா முழுவதும் எழுந்திருக்கின்றன. நீண்ட காலமாக தொகுதி மறுசீரமைப்பு பற்றி பேசாமல் மௌனமாக இருந்த மாநிலங்கள் கூட தற்போது பேச தொடங்கியிருக்கிறது. இந்த எழுச்சிக்கு காரணம், தமிழ் நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.