தகவல் போர் தோல்வியும் விமான இழப்புகளும்: மோடி அரசின் செயல்பாடுகள் மீது எழும் கடும் கேள்விகள்!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான சமீபத்திய வான்வழி மோதலில், இந்தியா குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான போர் விமானங்களை இழந்தது என்பதை பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். இந்த அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம், நாடாளுமன்றத்திலோ அல்லது பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தியாளர் மாநாட்டிலோ இல்லாமல், சிங்கப்பூரில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டின் ஓரத்தில், ஒரு வெளிநாட்டு பத்திரிகையாளரிடம் ஹோட்டல்