ஹன்ஸிகா மோத்வானி மீது ‘குடும்ப வன்முறை’ தொடர்பாக காவல்துறை எப்.ஐ.ஆர். பதிவு செய்தது
மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலக்கு அறிமுகமான நடிகை ஹன்ஸிகா மோத்வானி. அதைத் தொடர்ந்து பல்வேறு மொழிப் படங்களில் நடித்து தனக்கான ரசிகர் வட்டத்தை அமைத்துக் கொண்டவர். இவருடைய சகோதரர் பிரசாந்த் மோத்வானிக்கும், தொலைக்காட்சி நடிகையான முஸ்கன் நான்சி ஜேம்ஸ் என்பவருக்கும் 2020-ல் திருமணம் நடந்தது. ஆனால் 2022-ல் இருவரும் பிரிந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக தனித் தனியே வாழ்கின்றனர்.
