அமெரிக்காவில் தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி- ‘துரோகி’ முத்திரை குத்திய பாஜக!
டெல்லி: இந்திய தேர்தல் ஆணையம் சமரசமான அமைப்பாகிவிட்டது; இந்திய தேர்தல் ஆணைய அமைப்பில் ஏதோ பெரிய தவறு நிகழ்ந்துவிட்டது என்று அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சரமாரியாக குற்றம்சாட்டி இருந்தார். ஆனால் பாஜகவோ, எப்போது வெளிநாடு சென்றாலும் இந்தியாவை அவமதிக்கிறார் ராகுல் காந்தி என்று பதிலடி தந்துள்ளது. அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் இந்தியர்களுடனான கலந்துரையாடலில்
‘அஞ்ச மாட்டோம்!’: நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் கார்கேவின் எதிர்ப்பு முழக்கம்!
நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை முதல் மற்றும் இரண்டாவது குற்றவாளிகளாகக் குறிப்பிட்டு அமலாக்க இயக்குநரகம் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீதான அமலாக்க இயக்குநரக குற்றப்பத்திரிகை கட்சியை அச்சுறுத்தாது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சனிக்கிழமை மத்திய அரசைக் கடுமையாகத் தாக்கினார்.