200 தொகுதிகளே இலக்கு! ஓசூர் முதல் சென்னை வரை முதல்வர் மு.க.ஸ்டாலினின் சூறாவளிப் பிரச்சாரப் பயணம்!
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆளும் திமுக மற்றும் எதிர்க்கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் இடைவிடாது பயணித்து வருகிறார். அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் அவர் மேற்கொண்ட தீவிரப் பிரச்சாரப் பயணம் தொண்டர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்களோடு மக்களாக ஒரு பயணம் நேற்று
