தேர்தல் ஆணையத்தின் ஏழு பதிலற்ற கேள்விகள்: பிரமாண அரசியல், கிடைத்த படிவங்கள் மற்றும் ‘சட்டவிரோத’ குடியேறிகள் குறித்த மௌனம்!
பீகாரில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை ஒட்டி, சர்ச்சைக்குரிய தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில், தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) ஞானேஷ் குமார் தனது முதல் பத்திரிகையாளர் சந்திப்பை ஆகஸ்ட் 17 அன்று நடத்தினார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த அந்தச்