தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவர ‘இந்தியா’ கூட்டணி திட்டம்!
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி திட்டமிட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் சட்டம், 2023-ன் படி, “உச்ச நீதிமன்ற நீதிபதியை நீக்குவதைப் போலவே, அதே முறையிலும், அதே காரணங்களுக்காகவும்” தலைமைத் தேர்தல் ஆணையரை அவரது பதவியிலிருந்து நீக்க முடியும். நீதிபதிகள்