“மேக்ஸ்வெல்லை அணியில் எடுப்பது ஆஸ்திரேலியாவுக்குப் பின்னடைவு” – பாண்டிங் சொல்வதென்ன?
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, சமீபத்தில் சொந்த மண்ணில் இந்தியாவுடனான பார்டர் கவாஸ்கர் தொடரை 3 – 1 எனக் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து, இம்மாத இறுதியில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கெதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவிருக்கிறது. இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் தொடரில் சிட்னியில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலியா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுவிட்டதால்,
