“ஆபரேஷன் சிந்தூர்” பிரதிநிதிகள் தேர்வில் அரசாங்கம் கட்சி பெயர்கள் கேட்டதேயில்லை – ரிஜிஜு கூறல் குறித்து காங்கிரஸ் கடும் எதிர்ப்பு!
ஆபரேஷன் சிந்தூர் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை வலியுறுத்துவதற்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் அனைத்துக் கட்சிக் குழுக்களுக்கு உறுப்பினர்களை பரிந்துரைக்குமாறு அரசியல் கட்சிகளிடம் அரசாங்கம் கேட்கவில்லை என்ற மத்திய நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜுவின் கூற்றை காங்கிரஸ் திங்கள்கிழமை நிராகரித்ததாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், கட்சி பரிந்துரைத்த நான்கு பெயர்களில் ஒன்றை மட்டுமே மத்திய