
புரட்சிக்கு குறுக்கு வழிகள் கிடையாது
பெரியாரை அவதூறாக பேசிய வகையில் சீமான் மீது தமிழகம் முழுவதும் பதியப்பட்ட வழக்கு களின் எண்ணிக்கை மட்டும் 70-க்கும் மேல் இருக்கும்.
அடுத்ததாக, ஈரோடு கிழக்கு இடை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் வெடிகுண்டு வீசுவேன் என்று பேசியதின் காரணமாக பதியப் பட்ட வழக்குகள் மட்டும் ஆறு.
அதேபோல் கடந்த முறை நடை பெற்ற ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில், சக்கிலியர்களை இழிவுபடுத்தி பேசிய வகையில், எஸ்சி/எஸ்டி அட்ராசிட்டி ஆக்ட் படி பதியப்பட்ட ஒரு வழக்கும் நிலுவை யில் உள்ளது.
இது இல்லாமல் ஏற்கனவே பதியப் பட்ட, தேசிய பாதுகாப்புச் சட்டம் நிலுவையில் இருக்கிறது.
ராஜிவ் காந்தியை நாங்கள் தான் கொன்று புதைத்தோம் என்று பேசியது தொடர்பான வழக்கும், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்குகளும் நிலுவையில் உள்ளது.
மேற்கூறிய இந்த வழக்குகளை எல்லாம் fast track கோர்ட்டிற்கு மாற்றி, முறையாக விசாரித்து, தகுந்த சாட்சியங்களை சேகரித்து, அனுபவமிக்க அதிகாரிகளை கொண்டு 161 ஸ்டேட்மெண்டை ஒரு சின்ன பிசிறு கூட இல்லாமல் தயாரித்து, தாக்கல் செய்தாலே போதும்,
சீமானின் பாதி வாழ்க்கை நீதிமன்றத்திற்கு அலைவதிலும், மீதி வாழ்க்கை சிறையிலும் முடிந்து விடும்.
அப்போதுதான் சீமான் மட்டுமல்ல, பெரியாரை அவதூறாக பேசுபவர் களை எச்சரிக்கும் விதமாகவும், நீதிமன்ற தீர்ப்புகளாகவும், அது எதிர்கால சந்ததியினருக்கு ஆவணங்களாகவும் மாற்றப்படும்.
இதுதான் இன்றய மற்றும் எதிர் கால எதிரிகளுக்கு நாம் கொடுக் கும் பதிலும் எச்சரிக்கையுமாகும்.
இப்படித்தான் பெரியாரிய இயக்கங்கள், சமூகத் தளத்தில் மட்டுமல்ல, நீதிமன்றங்களிலும் போராடித்தான் பெரியாரியலுக்கு இசைவான ஏராளமான தீர்ப்புக ளைப் பெற்றிருக்கிறார்கள் என்பது வரலாறு.
மேலும், மோடி ஆட்சிக்கு வந்ததி லிருந்து பெரியார் தொடர்பான வாசிப்பும், உரையாடல்களும் அதிகரித்திருக்கிறது.
குறிப்பாக சீமான் பெரியாரை இழி வாக பேசியதிலிருந்து பல்வேறு தலைவர்களும், பெரிய பெரிய ஊடகங்களும் பெரியாரை பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.
சமூகத் தளத்திலும் பெரியார் மறு வாசிப்புக்கு உட்படுத்தப் படுகிறார் சமூக ஊடகங்கள் முழுவதிலும், எண்ணற்ற புதிய இளைஞர்கள் பெரியாரின் பேச்சுக்களையும், எழுத்துக்களையும் தேடித்தேடி எடுத்து பதிவிடுகிறார்கள்.
பெரியாரிய இயக்கங்கள், வழக்கத்தை விட வேகமாக மீண்டும் கூட்டங்கள், கருத்தரங் கங்கள், போராட்டங்கள் என வீரியமாக களமிறங்கியிருக்கி றார்கள்.
இப்படியான ஒரு சூழலில், மத்திய அரசின் கல்விக் கொள்கை என்கி ன்ற பெயரில் தேசிய இனங்களை அறிவுக் குருடர்களாக மாற்றுவது,
நிதித் தர மறுப்பது, மாநிலத்தை மிரட்டுவது, இந்தியைத் தினிப்பது மட்டுமல்லாமல், தொகுதி மறு வரையரை என்று 39அய் 31ஆக் கும் முயற்சியில் ஒன்றிய அரசு இறங்கியிருக்கிறது.
இதை எதிர்த்து தென் மாநிலங்கள் எல்லாம் இணைந்து ஒன்றாகக் கைக் கோர்க்கும் சூழல் உருவாகியுள்ளது. இதுத் தொடர் பாக வட இந்திய ஊடகங்கள் அலறிக் கொண்டிருக்கின்றன.
ஒரு படி மேலே போய், சில வட இந்திய ஊடகங்கள், யுனைட்டட் ஸ்டேட் ஆப் இன்டியா உருவாகிறது என்று வெளிப்படை யாக பேசவும், எழுதவும் தொடங்கி விட்டார்கள்.
அதுமட்டுமல்லாமல், தமிழர்களுக்கே உரிமையுள்ள, தமிழன் கடல் பரப்பில் கிடைக்கும், 500 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள எரிபொருளை எடுப்பதற்கான திட்டத்தில், மாநில அரசின் அனுமதியில்லாமலேயே ஒன்றிய அரசு கையெழுத்திட்டி ருக்கிறது.
ஒன்றிய அரசின் இந்த ஒடுக்கு முறை திட்டங்களுக்கு எதிராக, பிஜெபியைத் தவிற்து, அனைத் துக் கட்சிகளும் தங்களது கண்ட ணங்களைத் தெரிவித்துள்ளன.
பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து, வருகின்ற அய்ந்தாம் தேதி அனைத்துக்கட்சிக் கூட்டத் தைக் கூட்டவிருக்கிறார் தமிழ் நாட்டு முதல்வர்.
இதையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த மக்களும் கோபத்தோடு போராட்டக் களத்திற்கு, மெல்ல மெல்ல தயாராகிக் கொண்டிருந்தார்கள்.
பல்வேறு காரணிகள் ஒரு மய்யப் புள்ளியில் திரண்டு அது இந்தி எதிர்ப்பாக மாறியதன் விழைவு, இந்தி எழுத்துக்களை தார் கொண்டு அழித்து மக்கள் எச்சரிக்கை செய்தார்கள்.
மத்திய அரசின் எதேச்சதிகாரப் போக்கைக் கண்டித்து மொழியு ரிமை என்கின்ற வடிவில் போர் மேகங்கள் சூழ்ந்து வரும் இந்த வேலையில்,
ஒரு சூரைக்காற்று, கூடி வரும் மழை மேகங்களை கலைத்தது போல, தொடர்ந்து சீமானின் பாலியல் பிரச்சனையை ஊடகங்கள் ஊதிப் பெருக்கின.
ஒட்டு மொத்த தேசத்தையும், வேறு திசையில் மடைமாற்றி ஓட வைத்து விட்டது.
ஆம்… இப்போது நடப்பது என்ன?
உயிராதாரப் பிரச்சினைகளிலிரு ந்து மக்களை திசை திருப்பி, ஒன்னுக்கும் உதவாத இந்த சீமான் – விஜயலட்சுமி பாலியல் வழக்கை பத்து நாளாக தலைப்புச் செய்தி யாக்கி, பரபரப்பாக பேசவைக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது.
இதனால் நேற்று வரை பேசிவந்த மாநிலஉரிமைகள் ஒத்தி வைக்கப் பட்டு, மக்களின் கோபம் காயடிக் கப்பட்டு, தமிழ்நாட்டு போராட்டக் களம், சிதறடிக்கப்பட்டு விட்டது.
ஊர் கோயில் திருவிழாக்களில், அரிச்சந்திரா மயான காண்டம் நாடகம் நடைபெறும்.
அதைப் பார்க்கும் மக்களெல்லாம் உணர்ச்சிப் பிழம்பாகமாறி மயான காண்டத்தில், கண்ணீரும் கம்பளையுமாக அழுது கொண்டி ருக்கும் போது,
இடையில் ஒரு பபூன் வந்து மக்களுக்கு கிளுகிளு பூட்டிச் செல்லுவார். இதைத்தான் சீமானும் தமிழக அரசியலில் செய்கிறார்.
இதை தாண்டி சீமான் – விஜயலட்சுமி பிரச்சனையால் இங்கு ஆகப் போவது என்ன?
அல்லது தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சியில் உள்ள நிர்வாகி கள் விலகிச் சென்று கொண்டிருக் கிறார்களே, சீமான் கூடாரம் காலியாகிக் கொண்டிருக்கிறதே, அது சீமான் – விஜயலட்சுமி பிரச்சனையால் தானா?
இல்லை இந்த சமூகத்தின் உளவியலே வேறு.
சீமானை வீழ்த்த பெரிய சூழ்ச்சி எல்லாம் தேவையில்லை, அடிக்கடி அவரை தூண்டி விட்டுக் கொண்டி ருந்தாலே போதும், நூனலும் தன் வாயால் கெடும் என்பதுபோல, அவர் தன் வாயாலேயே அம்பலப் பட்டு, சொந்த செலவில்லையே செத்துப் போவார்.
சரி, நானும் பொதுஜன உளவிய லில் இருந்தே கேட்கிறேன், உங்கள் கருத்துப் படியே, உங்களால் இந்த வழக்கில் சீமானுக்கு தண்டனை பெற்றுத் தந்து விட முடியுமா?
இந்த பாலியல் வழக்கை புரிந்து கொள்ள பெரிய அளவில் சட்ட ஞானமெல்லாம் தேவையில்லை. நீதிமன்றம் தொடர்பான குறைந்த பட்ச அறிவு இருந்தாலே போதும்.
அல்லது சீமானின் தொடக்க காலங்களில், அவரின் வாழ்க்கை முறையை கவனித்தவர்களுக்கு தெரியும் இந்த வழக்கு என்னவாக முடியப் போகிறது என்பது.
செந்தில் பாலாஜி வழக்கு விஷயத்திலும் அப்போது என்னை எள்ளி நகையாடினார்கள். பிறகு நான் சொன்னது தான் நடந்தது.
இப்போதும் சொல்கிறேன் இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிற்காது.
சீமான் – விஜயலட்சுமி பிரச்சினையை வைத்து, இயல்பான மக்களின் மலிவான ரசனையைத் தூண்டி, சில சராசரி மனிதர்களுக்கு கிளுகிளுப்பை தான் உண்டாக்க முடியும்.
அதைத் தவிர இந்த வழக்கில் வேறு எதையும் உங்களால் சாதித்துவிட முடியாது.
இன்னும் ஒரு படி மேலே போய் சொல்கிறேன். இந்த வழக்கின் தீர்ப்பு, சீமானை சட்டப்படியான புனிதவானாக மாற்றுவதற்குத் தான் பயன்படும்.
கிளிங்ன்டன் – மோனிகா லெவிங்ஸ்கி முதல், இன்றைய சீமான் – விஜயலட்சுமி வரை, ஆண்டுகள் இடைவெளி அதிகம் இருந்தாலும், பல்வேறு நாகரிக அறிவியல் முன்னேற்றம் ஏற்பட்டி ருந்தாலும்…
இதில் மாறாதது பாலியல் தொடர் பான பொதுச் சமூக உளவியல் தான். ஆமாம், பெண்ணுறுப்பைச் சுற்றியே நீங்கள் கட்டமைக்கும் அரசியல் மட்டும் தான் மாறாமல் இன்னும் அப்படியே இருக்கிறது.
சில நேரங்களில் இப்படியான சீமானின் அரசியல் சில முற்போக் காளர்களை வேண்டுமானால் முகம் சுளிக்க வைக்கும்.
ஆனால் இந்த வழக்கு என்பது பல நேரங்களில் மக்களின் ரசனைக் குரியதாக கூட மாற்றம் பெறும், அதனால் சீமானுக்கு கூடுதல் மைலேஜ் கிடைக்கும் அபாயமும் இருக்கிறது.
மற்றபடி இதனால் எல்லாம் எந்த வித அரசியல் பாதிப்பையும் சீமானுக்கு ஏற்படுத்தி விடாது, ஏற்படுத்தி விடவும் முடியாது.
இதைத்தான் நீங்கள் எதிர்பார்க்கி றீர்கள் என்றால், தொடர்ந்து எழுதுங்கள், பாலியல் வறட்சியில் சிக்கித் தவிக்கும், இப்போதைய வாசகனுக்கும் இதுதான் தேவைப் படுகிறது.
ஆனால் ஒன்று மட்டும் சீமானைப் பற்றி என்னால் உறுதியாக சொல்ல முடியும்.
ஒருவன் தன்னை அசிங்கப்படுத்த வருகிறான் என்று தெரிந்தாலே போதும், உடனே அம்மணமாக நிற்கும் மனநிலைக் கொண்டவர் சீமான். காரணம் சீமானின் இயல்பு அப்படி.
இனிமேலாவது எதிரியை வீழ்த்தும் யுத்திகளை மாற்றுவோம்.
- நெய்வேலி அசோக்
பொது செயலாளர்
தோழர் களம்