நேற்று நியூஸ் 18 சேனலுக்கு ஈழ போர்க்களத்தில் நேரடியாக விடுதலை புலிகளின் கலைத்துறையில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் சந்தோஷ் அவர்களை நெறியாளர் கார்த்திகை செல்வன் எடுத்த முக்கியமான நேர்காணல்
Opinion

நேற்று நியூஸ் 18 சேனலுக்கு ஈழ போர்க்களத்தில் நேரடியாக விடுதலை புலிகளின் கலைத்துறையில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் சந்தோஷ் அவர்களை நெறியாளர் கார்த்திகை செல்வன் எடுத்த முக்கியமான நேர்காணல்

Jan 27, 2025

யூடியூபில் அந்த வீடியோ 1 மணி நேரம் 10 நிமிடம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

நாம் அனைவரும் சீமான் எவ்வளவு மோசமான பொய்யர், அய்யோகியர், சந்தர்ப்பவாதி என்று எளிதில் தெரிந்துகொள்ள அந்த காணொளியின் டாப் 10 சுவாரசியங்கள் பின்வருமாறு

1) சீமான் ஆயுதம் வைத்துள்ள புகைப்படம் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் அவர்கள் எடுத்தது. பல ஆண்டுகளாக சீமான் ஆதரவாளர்கள் குறிப்பாக இடும்பாவனம் கார்த்திக் சொன்னது பொய் என்றும் “Geo Tagging” புகைப்படங்கள் தன்னிடம் ஆதாரம் இருப்பதாக சந்தோஷ் சொல்லி இருக்கிறார்

2) சீமான் தலைவர் பிரபாகரனை சந்தித்தது வெறும் 9-10 நிமிடங்கள் தான், அதுவும் ஒரே முறை. அதற்கும் வீடியோ ஆதாரங்கள் உள்ளது

3) அங்கு புலிகள் ஈழ மக்கள் குறித்து வெளி உலகிற்கு எடுத்து சொல்ல சீமான் போன்ற ஒரு பேச்சாளர் வேண்டும் என்கிற நோக்கத்தில் தான் அவரை அழைத்து பேசினார்கள். சீமான் சொன்னது போல பிரபாகரன் குடும்பத்தினர் யாரையும் சீமான் பார்க்கவில்லை. பார்த்ததாக சீமான் சொன்னது பச்சை பொய் என்றும் நேர்காணலில் சந்தோஷ கூறினார்

3) 2009 போர் காலத்தில் Skype காலில் புலிகள் சேரலாதன் அவர்களோடு வீடியோ கால் பேசும் போது சீமான் உடன் விஜயலக்ஷ்மி இருந்ததை கண்டு கோவம் அடைந்தது, இதை விஜயலக்ஷ்மி அவர்களும் பலபேட்டிகளில் ஏற்கனவே உறுதி செய்திருக்கிறார்

4) ஜூலை 2009 இல் ரூபன் என்கிற புலிகள் இயக்கத்தை சார்ந்த ஒரு ஏமாற்று நபரை வைத்து சீமான் மேதகு பிரபாகரன் உயிரோடு அண்டை தீவுகளில் இருப்பதாக கட்டுக்கதைகளை சொல்லி மருத்துவ செலவிற்கு 10 லட்சம் ரூபாய் கொளத்தூர் மணி அண்ணன் மற்றும் பலரையும் ஏமாற்றியது. பலமுறை திரு சந்தோஷ் அவர்கள் சொல்லியும் நம்பாமல் சீமான் சொன்னதை நம்பி 10 லட்சம் ஏமாந்த சம்பவம் அதில் அடங்கும்

5) புலிகள் அமைப்பை சார்ந்த சிலரை சீமான் தொடர்பு மூலமாக இந்திய உளவு கைது செய்தது. சந்தோஷ் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக இருந்த நேரத்தில் புலிகள் அமைப்பை சேர்ந்த ஒருவரை சீமான் அழைத்து வந்து பார்க்க வைத்தார், அடுத்த நாளே இந்திய உளவுத்துறை அவரை கைது செய்யப்பட்டார்

6) Hallucination – ஆமைக்கரி முதல் AK74 வரை அந்த காலகட்டத்தில் சென்ற பலருக்கும் நடந்த விஷயங்களை சீமான் தனக்கு நடந்தது போல பேசியது

7) புலிகள் சூசை அவர்கள் இறுதியாக பேசிய ஆடியோவை தர சொல்லி கெஞ்சி கேட்டு காலை பிடித்து வாங்கி வெட்டி ஒட்டி வெளியிட்டது

8) புலிகள் சூசை சந்தோஷ அவர்களுடன் பேசிய ஆடியோ திரு வைகோ மற்றும் பழ நெடுமாறன் அவர்களுக்கு போட்டு காட்டிய போது அவர்கள் அதை வாங்காமல் போனது, சீமான் மட்டும் கேட்டு வாங்கி அதை அரசியலுக்கு பயன்படுத்தியது

10) சீமான் பிரபாகரனை சந்தித்த நாள் Feb 13, 2008 மாலை, அந்த வீடியோ ஆதாரம் சந்தோஷ் அவர்களிடம் உள்ளது

இதை நாம் அதிகம் பேச வேண்டும்

2008 போர் நேரத்தில் ஈழத்தில் பலரும் தங்களுக்கு நடந்த சுவாரசியமான சம்பவங்களை பகிர்ந்ததை கேட்டு தனது பேச்சாற்றல் + கற்பனை வளம் இரண்டையும் கலந்து ஆமைக்கரி முதல் AK74 கதைகளை சொல்லி நாக்பூர் RSS உதவியோடு வாழ்நாள் ஊக்கதொகையை (lifetime settlement) வாங்கி விட்டார் சீமான்

பேருக்கு ஏற்ற வாழ்க்கை, வானை தொடும் பொய்கள், கணக்கே இல்லாத கட்டுக்கதைகள், உன்னதமான உருட்டுகள் என்று எப்படி சொன்னாலும் அது சீமான் ஒருவருக்கு தான் பொருந்தும்.

அரசியல் செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *