
பெரியாரும், பெரியாரிஸ்டுகளும் இந்த மண்ணில் இருப்பதா வேண்டாமா என்கின்ற மானப் பிரச்சனை இது – சீமான்
வெறுப்பிலும், விரக்தியிலும் இருக்கும் பெரியாரிய தோழர்களுக்கு இந்த நம்பிக்கை கூடவா கொடுக்க முடியாது..!?
தொடர்ந்து திராவிடத்தையும் தந்தை பெரியாரையும் அவதூறு பரப்பி வரும் சீமான் என்கின்ற கோமாளி தற்போது ஒரு படி மேலே சென்று பேசுவதற்கு பதில் கதறிக் கொண்டிருக்கிறார்.
ஆம், இப்போது திடீர் என்று புத்தி பேதலித்து முன்னுக்குப் பின் முரனாக, யார் யாரோடு புணர வேண்டும் என்று தனது தெய்வத்தின் குரலில் மகா பெரியவா சொன்னதை, வழக்கம் போல பெரியார் சொன்னதாக ஒரு அப்பட்டமான பொய்யைப் பரப்பி வருகிறார்.
ஏன் இந்த தடுமாற்றம் வழக்கமாக ஏதாவது கத்திக் கொண்டிருக்கும் சீமான், இப்போது பதறி கொண்டு இருக்கிறார் என்றால்..? அதற்குக் காரணம் விஜய் படுத்தும் பாடுதான். அதாவது ஓட்டு அரசியல் படுத்தும் பாடு தான்.

விஜயின்அரசியல் பிரவேசத்திற்கு பிறகு சீமானின் அனைத்து நிலை நிர்வாகிகளும், மாவட்ட நிர்வாகங் களும் கொஞ்சம் கொஞ்சமாக கட்சியை விட்டு வெளியேறி வருகிறார்கள்.
தமிழ்நாட்டின் அரசியல் போக்கு இப்படித்தான் இருக்கும் என்று
ஏற்கனவே நாம் துல்லியமாக கணித்திருந்ததோடு, தொடர்ந்து எழுதியும், பேசியும் வந்தோம். அது தான் இப்போது நடந்து வருகிறது.
அதாவது பிஜேபியையும், நாம் தமிழர் கட்சியையும் வருகின்ற 2026 தேர்தலில் கடைசி வரிசைக் குத் தள்ளப் போவது விஜயின் அரசியல் வருகைதான் என்பதை இப்போதும் ஆணித்தரமாக கூறு கிறோம்.
ஆனால் சமூக மற்றும் அரசில் அசைவுகளைப்பற்றி எல்லாம் கொஞ்சம்கூட எந்தவித கவலை யும் இல்லாமல், வழக்கம்போலவே இந்தப் பிரச்சனையிலும் சீமானை கேலியும் கிண்டலுமாகவே கடந்து போகப் பார்க்கிறார்கள்.
அது மட்டுமல்லாமல் இத்தனை ஆண்டுகளாக, சீமானை தனிமைப் படுத்த முயற்சிக்காமல், அவர் ஓட்டு வங்கியை வீழ்த்த முயற்சிக் காமல் பிஜெபி யோடு முடிச்சிப் போட்டு, இந்துத்துவாவிற்கும் நல்ல வகையில் விளம்பரம் செய்துத் தந்தார்கள்.
இப்படியெல்லாம் செய்தால் சீமானை வீழ்த்திவிட முடியும் என்கின்ற தப்பான கணக்குதான் நாம் தமிழர் கட்சியின் ஓட்டு வங்கியை உயர வைத்ததே தவிர, இவர்களின் பிரச்சாரத்தால் நாம் தமிழர் கட்சியின் ஒரு விழுக்காட்டு ஓட்டு வங்கியைக்கூட அசைத்துப் பார்க்க முடியவில்லை.
சீமானை வீழ்த்த வேண்டுமானால் அவரின் ஓட்டு வங்கியை வீழ்த்த வேண்டும் என்கின்ற அடிப்படை அறிவுக்கூட இந்த இயக்கவாதி களுக்கு இல்லாமல் போனதுதான் பெரியாரின் பகுத்தறிவுக்கான பெரும் சோதனையாக முடிந்து விட்டது.
ஆனால் சீமான் புத்திசாலி, இவர் களைப் போல அரைகுறை அரசியல்வாதியல்ல அவர். விஜய் வருகையின் ஆபத்தை விரைவா கவே உணர்ந்து கொண்டார் அப்படி உணர்ந்த காரணத்தினா லும், தனது கூடாரம் கலைந்து கொண்டிருக்கிறது,
எல்லா மாவட்ட நிர்வாகிகளும் விலகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றிய பயத்தினாலும், இருப்பவர்களையாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டுமே என்கின்ற பதட்டத்தினாலயும் தன் நிலையை மறந்து, தன் தகுதியை மறந்து கதற ஆரம்பித்திருக்கிறார்
அந்தக் கதறல்தான் பெரியாரைப் பற்றியஅவதூறாகவந்திருக்கிறது
ஆம், சீமான் தற்போது பெரியாரை பற்றி அவதூறு பேச வேண்டிய தேவை என்ன ஏற்பட்டது என்பதை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்..?
விஜய் தனது கட்சியின் கொள்கை தலைவராக தந்தை பெரியாரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கி றார். இப்படியான அறிவிப்பு புதிய தலைமுறை இளைஞர்களிடமும், அரசியல் அனுபவம் அற்ற தனது ரசிகர்களிடமும் பெரியாரைக் கொண்டு சேர்கிறது.
குறைந்தபட்சம் இனி தமிழகம் முழுவதிலும் அவர்களின் சுவரொட்டிகளிலும்கூட பெரியார் படத்தைத் தவிற்கவே முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.
இந்தப் போக்கு திராவிட அரசியலை எதிர்ப்பதன் மூலம் மட்டுமே சீமானுக்கு எதிர்காலம் என்கின்ற நிலையை, விஜயின் அரசியல் வருகையும், பெரியாரே எங்கள் கொள்கைத் தலைவர் என்கின்ற விஜயின் அறிவிப்பும் கேள்விக்குள்ளாக்கி விட்டது.
அதனால் தான் பெரியாரின் பிம்பத்தை உடைப்பதன் மூலம், தவறான தலைவரை தத்துவத்தை விஜய் வழிகாட்டுகிறார் என்று கூறி, விஜயின் பின்னால் போகும் அரசியலற்ற ரசிகர்களை ஈர்ப்பதன் மூலம் தனது கட்சியின் பலகீனத்தைச் சரி செய்துவிடலாம்
தனது ஓட்டு வங்கியையும் தக்க வைத்துக் கொள்ளலாம்,
மேலும் விஜயின் ஓட்டு வங்கியை யும் வீழ்த்தி விடலாம் என்கின்ற அரசியல் யுத்தியை தான் சீமான் பயன்படுத்துகிறார் அப்படியானால் இப்போது பலர் பேசிக் கொண்டிருப்பதைப் போல, உண்மையில் சீமானின் பகை இலக்கு பெரியார்தானா என்கின்ற கேள்வியை நாம் இலகுவாக கடந்து விட முடியாது.
நாங்கள் அறிந்த வகையில் இது தமிழக வெற்றிக் கழகத்திற்கும், நாம் தமிழர்கட்சிக்குமான மோதல். விஜயின் கட்சியைப்பற்றி நிருபர் கள் கேட்கும் போது, விஜய் ரசிகர் களை உடைத்து வெளியேற்ற சீமான் பயன் படுத்திய வார்த்தை கள் அது.
நேர்மையாக சொல்ல வேண்டு மென்றால், சீமானிற்கு வெற்றி பெற வேண்டும், அதிகாரத்திற்கு வர வேண்டும் என்கின்ற நோக்கம் எல்லாம் ஒரு காலமும் கிடையாது.
பேரம் பேசுவதற்கும், பேரம் பேசுவ தற்கான தகுதியை வளர்த்துக் கொள்வதிலும்தான் சீமானின் மொத்த கவனமும் இருக்கிறது.
மிகமிக ஏழ்மையிலும், ஒருவேளை சோற்றுக்கும் வழியில்லாமலும், கஷ்ட ஜீவனம் நடத்தி வந்த இந்த நபருக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு தான் இந்த அரசியல். தனது சாதுரியத்தால் இதை வைத்து தன் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்கிறார் அவ்வளவுதான்.
அவரின் ஓட்டு வங்கி மட்டும் சரிந்து விட்டால் போதும் சீமானின்
ஒட்டுமொத்த ஆட்டமும் காலியாகி விடும். பிறகு நாம் தேவையில்லை நாக்பூர் கூட்டமே சீமானை முடித்து வைத்து விடும்.
இந்த ஓட்டு வங்கியை வைத்துக் கொண்டுதான் தமிழ் தேசியம் என்கின்ற பெயரில் ஒவ்வொரு கட்சியிடமும் மாமுல் வாங்கிக் கொண்டிருக்கிறார். நாங்கள் சொல்வதில் ஏதாவது தவறு இருக்குமேயானால், ஆளுங்கட் சியோ அல்லது எதிர்கட்சியோ மறுக்கட்டுமே பார்க்கலாம், நாங்கள் சீமானுக்கு மாதாமாதம் கப்பம் கட்டவில்லை என்று.
சீமான் அப்படி நான் யாரிடமும் வாங்கியதில்லை என்று மறுக்கலாம் காரணம் பொய் சொல்வது மட்டுமே அவருடைய முதன்மையான பணி மட்டுமல்ல அதுதான் அவரின் மூலதனமே என்பதால் அவரின் வார்த்தையை எடுத்துக் கொள்ள முடியாது.
ஆனால் இந்தக் கட்சிகளிடம் நெருக்கமாக இருக்கும், வேறு எந்த கட்சியின் தலைவராவது இது தவறான தகவல் என்று மறுக் கட்டுமே பார்க்கலாம். இல்லை யென்றால் நாங்கள் வெளியிடு கிறோம்…
திருச்செந்தூர் கோவிலுக்கு சீமான் பரிசளித்தாரே, 35 லட்ச ரூபாய் மதிப்புடைய, வைர கற்கள் பதித்த தங்கவேல். இதை சீமானுக்கு அன்பளிப்பாக கொடுத்தது யார் என்பதை நாங்கள் பட்டவர்த்தனமாக வெளியிடுகிறோம்.
எனவே அரசியலில் ஒருவரை ஒருவர் தாங்கிக் கொள்பவர்களா கவும், ஆதாயம் தேடிக் கொள்பவர் களாகவும் இருக்கிறார்களேத் தவிர, பெரியாரையோ, திராவிடத் தையோ இழிவு படுத்துவதை கண்டிப்பது அவர்களின் நோக்கம் கிடையாது.
ஆனால் இந்த அப்பாவி பெரியா ரிஸ்டுகள் தான் உண்மை நிலை புரியாமல் வீதியில் வந்து போராடி மேலும் மேலும் எதிரிகளுக்கு விளம்பரம் தேடித் தருகிறார்கள்.
சரி அதுகூட வேண்டாம், இப்படி அப்பட்டமாக, பச்சையாக பெரியா ரைப் பற்றி பொய்யும், புனை சுருட்டுமாக பேசுவதற்கான துணிச்சல் சீமானுக்கு எங்கிருந்து வந்தது என்பதையாவது யாராவது யோசித்தார்களா..!?
ஒரு சின்ன முன் உதாரணத்தைப் பார்ப்போம், திமுகவை விமர்சித்த ஒரே காரணத்தினால் தமிழகம் முழுவதும் கஞ்சா வழக்குகள் உட்பட பல வழக்குகள் போட்டு, சவுக்கு சங்கரை அலைய விட்டதே தமிழக அரசு! அதேபோல சீமானை யும் கைது செய்து சிறையில் அடைக்கச் சொல்லுங்களேன் பார்ப்போம்.
செய்ய மாட்டார்கள் ஏன் என்றால், பெரியார் மீதும் பெரியாரிஸ்டுகள் மீதும் உள்ள மரியாதை அவ்வளவு தான்.
காரணம், பெரியாரிஸ்டுகள் சமூகத்தின் மீது ஆதிக்கமோ, ஆளுமையோ செலுத்துவதில்லை அவர்களுக்கு என்று ஓட்டு வங்கி யும் கிடையாது.
அல்லது அதிமுகவிற்கு போக வேண்டிய திமுகவின் எதிர்ப்பு ஓட்டுகளைப் பிரித்து, திமுக வெற்றி பெறுவதற்கு சீமானை போல, பெரியாரிஸ்டுகளால் உதவவும் முடியாது.
வேண்டுமானால் திமுகவை ஆதரிக்கிறேன் என்று வெறும் வாயில் வடை சுட்டுக் கொண்டி ருக்க முடியுமேத்தவிர பெரியாரிஸ் டுகளால் அரசிற்கோ, நிர்வாகத் திற்கோ எந்த லாபமும் கிடையாது என்பதுதான் நிதர்சனமான, கசப்பான எதார்த்தம்.
அதற்குத் தகுந்தாற்போல் பெரியாரிய இயக்கங்களும், பெரியாரிஸ்டுளும் தங்களது பார்கைன் கெப்பாசிட்டியை எப்போதோ இழந்து விட்டார்கள்.
அதேபோல, வழியச்சென்று நாங்கள் பிரச்சாரத்திற்கு வருகிறோம் என்று சொன்னால் கூட, அய்யா சாமி பணம் வேண்டு மானால் கொடுத்து விடுகிறோம் தயவு செய்து நீங்கள் பிரச்சாரத் திற்கு வராதீர்கள் என்பதுதான் பெரியாரிஸ்டுகளைப் பற்றிய இன்றய அரசியல்வாதிகளின் மதிப்பீடாக இருக்கிறது.
இதற்குக் காரணம் என்ன?
பெரியாரிஸ்டுகளின் சமூகப் பிடிப்பு தளர்ந்து விட்டது என்பதும், அவனுக்கான சமூக அங்கிகார மூம், சமூக மரியாதையும் போய் விட்டது என்றும் தானே பொருள்.
எந்த ஆட்சி வந்தாலும் அதன் கையைத்திருகி வேலை வாங்கும் பெரியாரின் வழித்தோன்றல்க ளின் இப்படியான பரிதாப நிலையை ஈவு இரக்கமில்லாமல் சுய பரிசோதனைச் செய்யாமல், இதற்கான பரிகாரம் தேடாமல் எதிரிகளை எப்படி வீழ்த்த முடியும்.
மேலும் இப்படியான ஒரு கூட்டத்தை நம்பி, எப்படி சீமான் மீது இந்த அரசு நடவடிக்கை எடுக்கும்? வேண்டுமானால் பெரியாரிய தலைவர்கள் கோவித் துக் கொள்ளக்கூடாது என்பதற் காக இந்தப் பிரச்சனையை நீதி மன்றத்தின் பக்கம் அரசு தள்ளி விட்டு, நீதிமன்ற உத்தரவை நிறை வேற்றினோம் என்று தப்பித்துக் கொள்வார்கள்.
மீண்டும் மீண்டும் தொடர்ந்து சொல்கிறோம், மத்திய அரசிடம் இருந்து தற்காத்துக் கொள்ள இந்த ஆட்சிக்கு பெரியார் தேவை!
ஓட்டுக்களைப் பிரித்து வெற்றிக்கு வழி வகுப்பதால் சீமான் திமுகவிற் குத் தேவை..!!
இந்த அரசியல் சூதாட்டத்தில், பெரியாரிஸ்டுகளின் தேவை எங்கே இருக்கிறது என்பதை அவரவர் மனசாட்சிக்கே விட்டு விடுகிறோம்.
மற்றபடி பெரியார் எதிர்ப்பும், திராவிட எதிர்ப்பும் பாப்பானிடம் பொறுக்கித் திண்ண சீமானுக்கு ஒரு ஏற்பாடு அவ்வளவுதான். அதற்காகத்தான் கட்சி, அதற்கா கத்தான் தமிழ்த்தேசியம்.
உண்மையில் இங்கு உள்ளவர்கள் விஷயம் புரிந்தவர்களாக இருந்தி ருந்தால், பெரியாரை, இந்த காரியக் கிறுக்கன் சீமான் இப்படி கொச்சைப்படுத்தியவுடன், நியாயமாக என்ன செய்திருக்க வேண்டும்..!?
தங்களின் கட்சிக்கு தந்தை பெரியாரை தத்துவ தலைவராக அறிவித்துக் கொண்ட, தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்தவர் கள் வீதிக்கு வந்திருக்க வேண்டும். அல்லது வர வைத்திருக்க வேண்டும். ஆனால் இப்படியான ஒரு அரசியல் ரசாயன மாற்றம் இங்கு நடை பெறவே இல்லை.
அதற்கான வாய்ப்பையும் கொடுக் கவில்லை. அல்லது முன்போ பின்போ அதற்கான சூழலை அமைத்துக் கொடுக்க யாரும் முன் வரவும் இல்லை. எனவே தமிழக வெற்றி கழகம் பெரியார் பிரச்ச னையில் இருந்து, பாதுகாப்பாக தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
தந்தை பெரியாரின் மேல் பற்று கொண்ட தலைவர்கள், அரசியலா ளர்கள், அரசியல் ஆய்வாளர்கள், பெரியாரிய யூக வகுப்பாளர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து இந்தப் பிரச்சினையை, நாம் தமிழர் கட்சிக்கும், தமிழக வெற்றிக் கழகத்திற்குமான முரண்பாட்டை மேலும் கூர்மைப்படுத்த பயன் படுத்தியிருக்க வேண்டும்,
இதை அவர்கள் இருவருக்கிடை யேயான மோதலாக மடை மாற்றி யிருக்க வேண்டும். நேர்மையாகச் சொன்னால் அதுதான் உண்மை யும் கூட.
விருப்பு வெறுப்பு இல்லாமல், உவத்தல் காய்த்தல் இல்லாமல் நேர்மையாக இந்த பிரச்சனையை திறனாய்வு செய்தால் தெரியும், இது இரண்டு ஓட்டரசியல் கட்சிக் கிடையேயான போட்டியில் பெரியாரை வீதியில் இழுத்து விடுகிறார்கள் என்று. நாமும் இந்தப் பந்தை லாவகமாக அவர்களின் மைதானத்திற்குள் ளேயே திருப்பி விட்டிருக்க வேண்டும்.
இதை செய்வதற்கு பண்ணையார் மனநிலை எப்போதும் பயன்படாது
இதை செய்ய துணிவும், அரசியல் போக்கை தனது கொள்கைக்கு இசைவாக மாற்றும் லாவகமும், புதிதாக யார் வந்தாலும் அவர்கள் நமது எல்லைக்குள் நின்று தான் அரசியல் பேச முடியும் என்கின்ற நிலையை ஏற்படுத்தவும் மான ஆணவமானம் பார்க்காமல் இறங்கி வேலை செய்ய வேண்டும். அப்போதுதான் பெரியாரியல் நீடித்து நிலை பெற்று நிற்கும்.
இன்னும் இதை எளிமையாக புரிந்து கொள்ள வேண்டுமானால், சீமான் என்கின்ற அரசியல் தரகனை மிக மிக இலகுவாக, எளிமையாக வீழ்த்தியிருக்க முடியும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் சீமான் ஒன்றும் இப்போது புதிதாக எதையும் பேசிவிடவில்லை…
பெரியார் பேசியதை, பேரறிஞர் அண்ணா பேசியதை, கலைஞர் பேசியதை, சி.பி.சிற்றரசு பேசியதை, மதியழகன் பேசியதை, ஈ.வி.கே.சம்பத்து பேசியதை, நாவலர்.நெடுஞ்செழியன் பேசியதை எல்லாம் தனது பாணியில் டைமிங்காவும், ரைமிங்காவும் பேசிக் கொண்டி ருக்கிறார் எனவே சொந்த சரக்கு இல்லாதவர் என்பதை, அவரின் பேச்சிலிருந்தே தொகுத்து மேற்கண்ட தலைவர்களின் பேச்சையும் ஒப்பிட்டு வெளியிட்டி ருந்தாலே இன்று சீமானுக்கு அரசியல் என்பதே இல்லாமல் போயிருக்கும்.
அதை விட்டுவிட்டு சீமானை கிண்டல் அடிப்பதும், நக்கல் அடிப்பதும் இவனெல்லாம் ஒரு ஆளா, நாம் பேசி இவனை வளர்த்து விடுவதா என்பது போன்ற சமாளிப்புகளால், தங்களின் அரசியல் வறட்சியை வெளிக்காட்டிக் கொள்ள வெட்கப் பட்டு கொண்டு 13 ஆண்டுகளுக்கு மேலாக இந்த விஷச் செடியை வளர விட்டுவிட்டு,
தற்போது உள்ள அரசியல் சூழலில், ஒட்டுமொத்த கட்சியும் காலியாகி கொண்டிருக்கக் கூடிய இந்த நேரம் பார்த்து, அதாவது சொந்த செலவில் செத்துப் போக காத்திருப்பவனுக்கு, மீண்டும் உயிர் கொடுக்க ஓடோடி வருகிறார்களே என்று நினைக்கும் போது இவர்களை நினைத்து அழுவதா சிரிப்பதா என்று கூட நமக்கு தெரியவில்லை.
எது எப்படி இருந்தாலும், பெரியாரை இழிவுபடுத்தி பேசிய, நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமானை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்பதுதான் அனைவரின் வேண்டுகோளாக வும், நமது விருப்பமாகவும் உள்ளது.
இதில் எந்தவித தப்பித்தல் போக்கும் இல்லாமல், சவுக்கு சங்கருக்கு காட்டிய அதே உத்வேகத்தை, சீமானிடமும் காட்ட வேண்டும் என்பதே இந்த அறிக்கையின் மூலம் தோழர்களம் அரசைக் கேட்டுக் கொள்கிறது.
உண்மையில் பெரியாரிஸ்டுக ளுக்கு இந்த அரசில் என்ன மரியாதை இருக்கிறது, பெரியாரை எந்த அளவிற்கு இந்த அரசு மதிக்கிறது என்பதையெல் லாம் நிருபிக்க வேண்டிய கட்டா யத்தில் இந்த அரசு இருக்கிறது.
இந்த அரசு சீமான் மீது எடுக்கப் போகும் நடவடிக்கையைப் பொறுத்து தான் பெரியாரிஸ்டு களின் பாதுகாப்பையும் அது உறுதிப்படுத்தும், பெரியாரிஸ்டு களுக்கும் இந்த அரசின் மீது நம்பிக்கை ஏற்படும். எனவே இன்றிலிருந்து ஏழு நாட்கள் இந்த அரசிற்கு தோழர் களம் அவகாசம் தருகிறது.
அதற்குள் நீதிமன்றத்தை காரணம் காட்டி ஏனோ தானோ வென்று வழக்குப்பதிந்து தப்பிக்க வைக்காமல், சீமான் மீது பிணை யில் வர முடியாத அளவிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையென்றால் தோழர் களம் நேரடியாக நடவடிக்கையில் இறங்கும். திறந்தவெளி நீதிமன் றத்தில் நேர்மையாக எங்களின் குற்றத்தை ஒப்புக்கொண்டு தண்டனை பெறவும் நாங்கள் தயங்க மாட்டோம். என்பதை இந்த அறிக்கையின் மூலம் தோழர் களம் அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறது.
தமிழனின் மான உணர்வுக்காக உழைத்த தந்தை பெரியாருக்காக போகாத உயிர் இருந்தென்ன பயன்.