சட்டப்பேரவையில் ஆளுநர் ரவியின் வெளிநடப்பு வரலாறு (2022-2026)
Tamilnadu

சட்டப்பேரவையில் ஆளுநர் ரவியின் வெளிநடப்பு வரலாறு (2022-2026)

Jan 20, 2026

தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆளுநர் ஆர்.என். ரவி ஆற்றிய உரைகள் மற்றும் அவர் மேற்கொண்ட வெளிநடப்புகள் குறித்த காலவரிசை இதோ:

  • 2022: தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனது முதல் உரையை ஆளுநர் முழுமையாகப் படித்தார். அரசின் திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை அவர் எடுத்துரைத்தார்.
  • 2023: உரையில் இருந்த மகளிர் முன்னேற்றம், மதச்சார்பின்மை, பெரியார், அம்பேத்கர் போன்ற வார்த்தைகளை அவர் வாசிக்காததால் அவையில் சர்ச்சை வெடித்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கு நேருக்கு நேர் பதிலடி கொடுக்க, ஆளுநர் அவையிலிருந்து வெளியேறினார்.
  • 2024: அவையின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்படுகிறது, தேசிய கீதம் பாடப்படுவதில்லை எனக் கூறி உரையை வாசிக்காமல் அமர்ந்து கொண்டார். சபாநாயகர் அப்பாவு அந்த உரையை வாசித்தார்.
  • 2025: முந்தைய ஆண்டில் கூறிய அதே காரணத்தை மீண்டும் எழுப்பி, அவையிலிருந்து உரையை வாசிக்காமல் வெளியேறினார்.
  • 2026: இப்போதும் அவையின் தொடக்கத்தில் தேசிய கீதம் பாடப்படவில்லை எனக் கூறி மீண்டும் உரையை வாசிக்காமல் வெளியேறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *