
சாகர்மாலா திட்டத்திற்காக தான் ரஜினி கடல்வழி பற்றி சர்ச்சை எச்சரிக்கை :
நடிகர் ரஜினிகாந்த் தனது பிஸியான நடிப்பின் நடுவில் இந்திய கடல் பரப்பு வழியே பயங்கரவாதிகள் ஊடுருவ கூடும் அதனால் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஒரு வீடியோவை பதிவேற்றம் செய்து உள்ளார். ஒருவேளை நடிகர் ரஜினிகாந்த் உளவுத்துறையில் பணியாற்றுகிறாரா, அல்லது உளவுத்துறை இவருக்கு செய்திகள் ஏதேனும் கொடுத்ததா என்கின்ற கேள்வி நமக்கு இருந்தாலும், இதனை கட்டுடைத்து பார்ப்பதன் மூலம் உண்மையை உணரலாம்.
சாகர்மாலா திட்டத்திற்கான சமூக மனநிலையை உருவாக்கவே இந்த காணொளி !
சாகர் மாலா திட்டம் கடந்த பிரதமர் வாஜ்பாயின் ஆட்சி காலத்தில் (2003ல்) முன்மொழியப்பட்ட திட்டமாகும். இத்திட்டத்தை அமல்படுத்த சாகர் மாலா வளர்ச்சிக் கம்பெனியாக உருவாக்கப்பட்டு அதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கப்பட்டு பின்னர்,அது இந்தியக் கம்பெனிச் சட்டத்தின் கீழ் பதியப்பட்டுள்ளது. நாட்டின் 7500 கிமீ நீளமுள்ள கடற்கரையையும் 14,500 கிமீ நீளமுள்ள உள்நாட்டு நீர் வழிகளையும் தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப சரக்கு போக்குவரத்திற்கானதாக மட்டும் முழுமையாக மாற்றுவதே திட்டத்தின் முதன்மையான நோக்கமாகும்.

ஆனால் தற்போதைய ஆட்சி அதனை முழுமையாக தனியார் வசம், குறிப்பாக அதானி, அம்பானி போன்ற பனியா பெரும் முதலாளிகள் வசம் செல்கிறது.
அவர்கள் துறைமுகம் கொண்டு வருகிறேன் என்கின்ற பெயரில், அங்கிருக்கும் பூர்வகுடி மீனவ மக்களையும், அவர்களை சார்ந்து தொழில் நடத்தும் மக்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்தி நவீன துறைமுக நகரங்களை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், அங்கிருந்த மண் சார்ந்த வாழ்க்கை முறையையும் கலாச்சாரத்தையும் முழுமையாக அழித்து விடுவார்கள். அதுமட்டுமல்லாமல், மீன்பிடி தொழில் முழுமையாக பெரும முதலாளிகளிடம் சென்று அவை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுமே தவிர உள்ளூர் மக்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கு மிக மலிவான உணவாக இருக்கக்கூடிய மீன் உணவு முற்றிலமாக தடைப்பட்டு போகும் வாய்ப்பும் உண்டு.
அதோடு மட்டுமல்லாமல், ஏற்கனவே குஜராத்தில் உள்ள அதானி துறைமுகங்கள் மூலம் எவ்வளவு போதைப் பொருட்கள் இந்த நாட்டில் பரப்பப்படுகிறது என்பதை இங்கே கூறி தான் யாருக்கும் தெரிய வேண்டும் என்கின்ற அவசியமில்லை.

அந்த நிலை தெனிந்திய துறைமுகங்கள் மூலம் நடைபெறும்.
துறைமுகம் நகரங்கள் என்கின்ற பெயரில் நவீன கலாச்சாரம் என்கின்ற பெயரில், போதை வஸ்துக்கள் எளிமையாக உள்ளே வரும் பொழுது, விபச்சாரம், பாலியல் தொல்லை, கேங்ஸ்டர்ஸ் கலாச்சாரம், ஆயுத கலாச்சாரம் போன்றவையும் பரிணாமம் அடையும் . இதை தடுக்கிறேன் என்கிற பெயரில் அந்தப் பகுதி முழுவதும் ராணுவ, கடலோர காவல் படை, கடல் படை போன்றவற்றால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும்.
இந்த காவல் கட்டுப்பாடு என்னும் தளத்திற்கு ஒரு முன்னோட்டமாக, மக்கள் மனதில் ஒரு சமூக பொது உளவியலை உருவாக்குவதன் மூலம், ரஜினி தான் அப்பவே இதைப்பற்றி சொன்னாரு, இது சாதாரண ஒரு நிகழ்வுதான் என்று சாமானிய மக்கள் கடந்து செல்வார்கள்.
சோமாலியாவின் நிலைமை தென்னிந்தியாவிற்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை !
இதில் வினோதம் என்னவென்றால், தமிழர்களின் ஒரு நூற்றாண்டு கனவான சேது சமுத்திர திட்டத்திற்கு எந்த ஒன்றிய அரசும் அனுமதி கொடுக்காது, அதேபோல கலைஞர் பேனா சிலை அமைக்கப் போகிறோம் என்றவுடன் தையத்தக்க என்று குதித்த எந்த முற்போக்கு சக்தியும் இயற்கை ஆர்வள சக்தியும் இதற்கு குரல் கொடுக்காமல் இருக்கிறது என்பதையும் பெரியாரிய திராவிட இயக்க தோழர்கள் புரிந்துகொள்ள வேண்டுமாறும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம் !
- நெய்வேலி அசோக்
பொது செயலாளர்
தோழர் களம்