பாகிஸ்தான் ராணுவ தாக்குதலால் காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக இன்று பிரதான எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சென்றிருந்தார்.
பூஞ்ச் பகுதிக்கு ராகுல் காந்தி சென்ற நிலையில் அங்குள்ள மக்களை ஆறுதல் படுத்தி ” இந்த நிலை மாறும் … மேலும் பள்ளிக்குச் சென்று படிப்பை நீங்கள் தொடர வேண்டும் நண்பர்களை மேலும் உருவாக்க வேண்டும்” என்று ஆறுதல் மொழி கூறி இருக்கிறார்.அது மட்டும் இல்லாமல் காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா அவர்களும் ராகுல் காந்தி வருகைக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் வழங்குவதாகவும் காஷ்மீர் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி ராகுலின் செயலைக் கண்டு பயந்திருக்கிறாரா? ஏன் பாதிக்கப்பட்ட மக்களை இதுநாள் வரையிலும் சந்திக்காதது குறித்து ராகுல் காந்தியின் கேள்விக்கும் மௌனம் காத்து வருகிறார் பிரதமர் மோடி. ஆனால் பிரதமரின் நிழலாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து மக்களின் வாழ்வியலை மேம்படுத்தும் விதமாக செயல்களை செய்து வருவது தேர்தலில் ராகுல் காந்திக்கு வாக்கு நிச்சயம் என்கிற நம்பிக்கையை தருகிறது.
ஆனால் இதை எதையும் பொருட்படுத்தாமல் பிரதமராக மோடி இருந்து என்ன பயன்? பிரதமர் மோடியா அல்லது பிக்னிக் மோடியா என்று தொடர்ந்து மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள் இதற்கு மோடி பதில் கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.