பனை மரம் ஏறுவதே “தர்மம்” “கர்ம பயன்” என்று அதனை குல தொழிலாக பார்ப்பனர் அல்லாத நாடார் சமூகமானது 2000 ஆண்டுகளாக வஞ்சிக்கபட்டது. காலனித்துவ காலத்தில், சற்றே மேற்கத்திய கல்வி மூலம் அந்த பணி தங்களது பிறவிச் செயலல்ல என பறைசாற்றி கல்வி, வணிகம், அமைப்பு ஆற்றல் ஆகியவற்றைத் தழுவி, சாதிக் கட்டுப்பாடுகளை உடைத்தெறிய தத்தமது வரலாற்றின் மிகப்பெரிய போராட்டத்தை மேற்கொண்டது.
“நாடார் மகாஜன சங்கம்” போன்ற சமூக சங்கங்கள் உருவாக்கப்பட்டு, நாடார் சமூகத்தை பிற தொழிலில், வர்த்தகத்தில், கல்வியில் உயர்த்த பாடுபட்டது.
நீதி கட்சியின் முக்கிய முகமும் பெரியாரின் நெருங்கிய நண்பருமான W.P.A. சௌந்தரபாண்டியன் நாடார் அவர்களின் சீரிய பணி, பெரியாரின் சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் ஆகியவை நாடார்கள் மத்தியில் புரட்சிகரத்தன்மையையும் நீதியியல் வலிமையையும் வழங்கின.
பிறவிச்சாதி தொழிலுக்கு அடிமையில்லை, மனித மரியாதைக்கு பிறவிச் சங்கிலிகள் கிடையாது என்று உரக்கப் பேசிய பெரியாரின் போர் பேச்சு நாடார் சமூகத்துக்குப் புதிய உலகைப் பிறப்பித்தது. இன்று இவர்கள் தமிழ் நாட்டின் முக்கியமான முதலாளி சமூகங்களில் ஒன்றாக, வர்த்தகத்தையும் கல்வியையும் ஆட்கொண்டு, “சாதிக்கழிவிலிருந்து மீண்ட”தில் மிக பெரும் எடுத்துக்காட்டு.
ஆனால் வரலாறு இன்று கடுமையானவிதமாக திரும்புகிறது அல்லது திருப்படுகிறது. திருவாளர் சீமான், பனைமரத்தில் ஏறி கள்ளை புகழ்கிறார் — நாடார் முன்னோர்கள் விட்டு மீண்ட பணியைப் பெருமையாக மீண்டும் பாராட்டுகிறார். பா.ஜ.க-வின் H. ராஜா, இந்துத்துவ சனாதன பிராமண-பணியா சக்திகளின் வாய்மொழி, இச்செயலை பாராட்டுகிறார்.
இதனை ஆதரித்த H ராஜா போன்ற பார்ப்பன மக்கள் பனை ஏறினால் நாங்கள் மனப்பூர்வமாக ஆதரிக்கிறோம் !
ஒருவேளை பார்ப்பனர் அல்லாத சுயமரியாதை மிக்க நாடார் சமூக மக்கள், பணை ஏறினால், அது தமிழ் நாட்டின் பொருளாதாரக் கட்டுப்பாட்டை வடஇந்திய பணியா வகுப்பிடம் — பெரியார் எச்சரித்திருந்த அந்த வர்த்தகச் சங்கிலி — யிடம் ஒப்படைக்கப் போகிறதா? செய்யாது, செய்யவே செய்யாது ! நாடார்கள் இல்லாத சென்னை தியாகராய நகர் வர்த்தகத்தை யோசித்து பாருங்கள் !
இவை வெறும் கலாசார, பொருளாதார சிக்கல் அல்ல; ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. வின் மத கலாச்சார அரசியல் திட்டத்தின் ஓர் அங்கம். ஒவ்வொரு தனிப்பட்ட சாதிகளையும் பிரித்து, அவற்றின் வரலாற்றுப் பிரத்தியேகங்களை அழித்து, “ஒரே இந்தியா” என்ற தேசிய இந்துத்துவ அடையாளத்துக்குள் கரைப்பதே இத்திட்டம்.
சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான வரலாற்று போராட்டம், சுயமரியாதை, சமதர்மம், திராவிடம் — போன்ற அனைத்தும் மறக்கப்பட்டு, நாடார் போன்ற சமூகங்கள் மீண்டும் பழைய தொழில்கள் பக்கம் இழுக்கப்படும்போது, வடஇந்திய பணியாப் பொருளாதார ஆட்சிக்கு வாயில் திறக்கப்படுகிறது. பெரியாரும், சௌந்தரபாண்டிய நாடாரும், திராவிட இயக்கமும் போராடியது இதற்கெதிராகத்தானே!
பனைமரத்தில் ஏறவேண்டும் என்றால் பார்ப்பனர்கள் ஏறட்டும்; இந்த “பனைமர தேசியம்” என்பது பழைய சாதிக்கொழுப்பை புதிய தேசியக்கொடியால் மூடியது மட்டுமே!
மீண்டும் சொல்கிறோம் ” பார்ப்பனர்கள் பனை மரம் ஏறட்டும் “
நெய்வேலி அசோக்
பொதுச் செயலாளர்
தோழர் களம்