ஓரணியில் தமிழ்நாடு’ – தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின் பயிற்சி முகாம்

திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்னெடுத்துள்ள 'ஓரணியில் தமிழ்நாடு'
உறுப்பினர் சேர்க்கை பரப்புரை திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கையாக, புதிய உறுப்பினர் சேர்க்கை செயலியின் செயல்பாடுகள் மற்றும் அதன் பயன்பாடு குறித்து தகவல் தொழில்நுட்ப (IT Wing) அணியின் மாநில அளவிலான பயிற்சி முகாம், 2025-ம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி புதன்கிழமை அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
பயிற்சி முகாமின் தொடக்கம்:
இம்முகாமை திமுக அமைப்புச் செயலாளர் திரு. ஆர். எஸ். பாரதி அவர்கள் துவங்கி வைத்தார். பயிற்சி முகாம், திமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளரும், மாநில அமைச்சர் ஆவார் முனைவர் டி.ஆர்.பி. ராஜா அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள திமுக தகவல் தொழில்நுட்ப அணிக்குள் உள்ள மாவட்ட நிர்வாகிகள், தொகுதி மற்றும் வாக்குச்சாவடி நிலை பொறுப்பாளர்கள் இதில் பங்கேற்றனர். 234 சட்டமன்ற தொகுதிகளையும் உள்ளடக்கிய வாக்குச்சாவடிப் பகுதிகளில் செயலியை எப்படி பயன்படுத்தி புதிய உறுப்பினர்களை சேர்க்கலாம் என்பது தொடர்பான நடைமுறை பயிற்சிகள் வழங்கப்பட்டன.
புதிய உறுப்பினர் சேர்க்கை செயலி முழுக்க முழுக்க டிஜிட்டல் மையமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் குறைந்தபட்சம் 100 புதிய உறுப்பினர்களை சேர்க்கும் இலக்குடன் திட்டம் அமையப்பட்டுள்ளது. சமூக ஊடகங்கள், வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற வலைதளங்களை பயனுள்ள வகையில் பயன்படுத்தும் முறைகள், மற்றும் டேட்டா நிர்வாகம் தொடர்பாகவும் பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சி முகாம் முடிந்தவுடன், ஜூன் 28 மற்றும் 29 தேதிகளில் வாக்குச்சாவடி நிலை பொறுப்பாளர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும். இதனைத் தொடர்ந்து, ஜூலை 1-ஆம் தேதி, மாண்புமிகு முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்ப்பு நிகழ்வை அதிகாரபூர்வமாக தொடங்கி வைக்க உள்ளார்.
திட்டத்தின் முக்கியத்துவம்:
இந்த உறுப்பினர் சேர்ப்பு இயக்கம், கழக வளர்ச்சிக்குப் புதிய உயிரோட்டத்தை ஏற்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படுவதோடு, தமிழகத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் திமுகவுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது டிஜிட்டல் டிரைவன் பரப்புரை என்ற புதிய வரலாற்றைப் படைக்கும் திட்டமாகவும் பார்க்கப்படுகிறது.
அரசியல் செய்திகள்