Nitin Gadkari: `அரசியல் என்பது திருப்தியற்ற ஆத்மாக்கள் நிறைந்த…’ – யாரைச் சொல்கிறார் நிதின் கட்கரி
Politics

Nitin Gadkari: `அரசியல் என்பது திருப்தியற்ற ஆத்மாக்கள் நிறைந்த…’ – யாரைச் சொல்கிறார் நிதின் கட்கரி

Dec 2, 2024

மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருக்கும் நிதின் கட்கரி, அரசியல் விவாதத்தை கிளப்பியுள்ளார். நாக்பூரில் நடந்த 50 Golden Rules of Life புத்தக வெளியீட்டு விழாவில் அவர் பேசுகையில், “அரசியல் என்பது திருப்தியற்ற ஆத்மாக்கள் நிறைந்த கடல். எம்.எல்.ஏ பதவி வேண்டுவோர் அமைச்சர் ஆக முடியாததால் வருத்தப்படுகின்றனர், அமைச்சராக இருப்பவர்கள் முதலமைச்சர் ஆக முடியாததால் சோகமாக உள்ளனர். அனைவரும் எதிர்பார்ப்புகளுடன் போராடுவதே அரசியல்” என்று தெரிவித்தார்.

கட்கரியின் இந்த கருத்துக்கள், அரசியலில் அவர் யாரைக் குறிப்பிட்டார் என்ற விவாதத்தை கிளப்பியுள்ளது. மூன்று முறை நாக்பூர் எம்.பி ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவர், பிரதமர் பதவியை ஆசைப்படினாலும், அது நரேந்திர மோடி வசம் சென்றதாக பேச்சு உண்டு. கட்சியின் முக்கிய நிகழ்வுகளில், மோடியை மரியாதையுடன் வரவேற்காத காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானதும் இந்த விவாதத்துக்கு ஊர்ஜம் சேர்த்தது.

கட்கரி தெரிவித்த கருத்துக்களை சிலர் பொதுவாக கருதினாலும், இதன் பின்னால் அரசியல் உள்ளது என்கின்றனர். அவரது பேச்சு தற்போது பாஜகவின் உள்நிலை அரசியல் மற்றும் தலைமை மையத்துடனான உறவுகளை மீண்டும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *