மங்களத்தம்மாவின் உருக்கமான வரிகள்: பாஜகவின் ஆட்சியை எதிர்த்து எழும் ஒரு நூற்றாண்டு வாழ்க்கையின் குரல்!
Opinion

மங்களத்தம்மாவின் உருக்கமான வரிகள்: பாஜகவின் ஆட்சியை எதிர்த்து எழும் ஒரு நூற்றாண்டு வாழ்க்கையின் குரல்!

Feb 14, 2025

வணக்கம் என் பேரு மங்கலம், எல்லாரும் என்னய மங்களத்தம்மா, மங்களத்தம்மானு கூப்புடுவாக… தம்பியளா, பொண்டுகளா எனக்கு 123 வயசு ஆகுது, ஆமா நான் ஒங்களுக்கெல்லாம் பாட்டியம்மா தான். ரெண்டு செஞ்சுரி போட்டுட்டு தான் போகனும்னு நான் ஒரு முடிவோட இருக்கேன்… ஆனா அது முடியாது போலருக்கே, என்னத்த சொல்றது, என்னோட பிரச்சனையை சொல்ல ஆரம்பிச்சா அது முடியாது போலருக்கே… சரி சுருக்கமா சொல்ல முயற்சி பண்றேன்… நான் ரெண்டு உலகப்போரை பார்த்தவ, எத்தனையோ இழப்புகள சந்திச்சவ, எவ்வளவோ கஷ்டப்பட்டுருக்கேன்…

ஆனால் அப்ப எல்லாம் ரொம்ப வைராக்கியமா, திடகாத்திரமா தான் இருந்தேன்… ஆனா இப்ப கொஞ்ச வருசமாவே எனக்குத் தாங்க முடியாத மன வேதனை… மன உளைச்சல் அதிகமாயிடுச்சு… எப்பயிலிருந்துன்னு கேட்குறீங்களா… குறிப்பா சொல்லனும்னா 2014லேர்ந்து தான் எனக்கு ரத்தக் கொதிப்பு வந்துருச்சு, நெஞ்சு படபடக்குது, கண்ணுலேர்ந்து தண்ணீ வடிஞ்சுக்கிட்டே இருக்கு, மன ரீதியாவும், உடல் ரீதியாவும் ரொம்ப நோவா இருக்கு…

இத்தனைக்கும் நான் அதிகமா உணர்ச்சி வசப்படுற ஆளு கெடையாது, என் ஒடம்பும், மனசும் ஒரம் போட்ட மாதிரி இருக்கும், அவ்வளவு சுலபமா எதுக்கும் கலங்கிட மாட்டேன்… கன் பா(ர்)ட்டி நான்… அப்படி இரும்பு மாதிரி இருந்த எனக்கே இந்த நிலைமைன்னா, பூப்போல பிஞ்சு மனசுள்ள உங்களைப் போல மத்தவங்க நெலைமைய நெனச்சு பார்த்தேன்… ஒன்னும் சொல்றதுக்கில்ல, நெனச்சா ரொம்ப கவலையா இருக்கு.


பின்ன இருக்காதா…. இரண்டாயிரம் வருசங்களுக்கு முன்னாடி வாழக்கூட லாயக்கில்லாத ஒரு கும்பல் நாட்டையே சின்னாபின்ன படித்தினா இப்புடி தான் எல்லாரும் கஷ்டப்படனும். 123 வருசத்துக்கு முன்னாடி பொறந்த எனக்கே இவய்ங்க கால பாதாளத்தோட அடியில கெடக்குற பாழும் பண்டித பயல்களா தெரியும் போது, இள வயசா உள்ள உங்களுக்கெல்லாம் இந்த கருமாந்துரங்கள் எப்படி இருக்குமோ. இதையெல்லாம் எப்டிய்யா தாங்கிக்கிட்டு இருக்கீங்க… இதுல மோசடி மன்னன் என்ன சொல்றாரு தெரியுமா, அவுக திரும்ப ஆட்சிக்கு வந்தாகன்னா இந்தியாவுக்கு அடுத்த ஆயிரம் வருசத்துக்கான அடித்தளம் போடுவாங்களாம்மா… ஏன்யா அமிர்த்கால், ஆயிரம் வருஷம்னு அடுக்கிக்கிட்டே போறீங்களே…

இப்படி சொல்றதுக்கு ஒங்களுக்கு ஏதாவது யோக்கிதை இருக்கா, மொதல்ல இந்த 21ஆம் நூற்றாண்டுல வாழ ஒங்களுக்கு அருகத இருக்கா… இன்றைய கால கட்டத்துக்கு ஏத்தமாதிரி எப்டி வாழுறதுன்னு மொதல்ல கத்துக்குட்டு வாங்கய்யா… அத விட்டுட்டு வந்துட்டாய்ங்கெலாம் ஆட்சி பண்றதுக்கு… இவெய்ங்களோட ஆட்சிய கால வழு, காலத்துக்கு ஒவ்வாததாகத்தான், ஆங்கிலத்துல ‘anachronistic’னு தான் சொல்லமுடியும்… இந்த கும்பல் வாய தொறந்தாலே பொய்யும் பித்தலாட்டமும் தான், அண்ட புழுகு, ஆகாச புழுகுன்னா கொஞ்ச நஞ்சமில்ல…. ஒரு உதாரணம் சொல்றேன்…

மோசடி அய்யா ரெகமெண்டேசன் பண்ணுனனால தான் திருக்குறள எல்லா உலகமொழிகள்லயும் மொழிபெயர்த்தாங்களாம், இது என்னய்யா திருவள்ளுவருக்கு வந்த சோதனை! இந்த ஐயா டீ ஆத்திக்கிட்டுருந்ததுக்கு ரொம்ப முன்னாடியே அந்த மொழிபெயர்ப்பெல்லாம் நடந்து முடிஞ்சுருச்சு… யாருக்கு யாருய்யா அறிமுகம் கொடுக்குறது… எதுஎதயெல்லாம் வெச்சு பொய் சொல்லி பேரு வாங்கிக்குறதுனு ஒரு வெவஸ்தையே இல்லாம போச்சு… இப்டியே போச்சுன்னா ஒன்னும் வெளங்காது பாத்துக்கங்க… சங்கி கும்பலோட சர்வதிகாரத்த சங்கறுக்க வேண்டிய நேரம் வந்துருச்சுடியோவ்… அதுனால தம்பிகளா, சின்னப் பொண்ணுகளா இந்த பாட்டி சொல்ல தட்டாதீக. பாஜகவுக்கு ஓட்டு போடாதீக…

(தொடரும்)

சமந்தா,
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *