மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு: பாஜக முன்னாள் எம்.பி பிரக்யா சிங் தாக்கூருக்கு மரண தண்டனை வேண்டும் என என்.ஐ.ஏ வலியுறுத்தல்!
National

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு: பாஜக முன்னாள் எம்.பி பிரக்யா சிங் தாக்கூருக்கு மரண தண்டனை வேண்டும் என என்.ஐ.ஏ வலியுறுத்தல்!

Apr 25, 2025

மும்பை: 2008-ல் மகாராஷ்டிரா மாநிலம் மாலேகானில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவ வழக்கில் பாஜக முன்னாள் எம்பி பிரக்யா சிங் தாக்கூர் உட்பட 7 பேருக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு ஏஜென்சி NIA சார்பில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்துப்பூர்வமான வாதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் மே 8-ந் தேதி மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.


மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே மாலேகான் நகரில் 2008-ம் ஆண்டு சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. மாலேகான் நகரில் இரு சக்கர வாகனம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் அப்பாவி பொதுமக்கள் 6 பேர் பலியாகினர். இந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 100-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
மாலேகான் குண்டு வெடிப்பு தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் இந்துத்துவா தீவிரவாத கும்பலுக்கு இந்த நாசகார சதியில் தொடர்பிருப்பது அம்பலமானது. தீவிர இந்துத்துவா கொள்கையை பேசிவந்த பாஜகவைச் சேர்ந்த பெண் துறவி பிரக்யாசிங் தாக்கூர், ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாய் உட்பட 7 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த நிலையில் இந்த 7 பேரும் ஜாமீனில் விடுதலையாகினர்.


மாலேகான் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஜாமீனில் விடுதலையான பெண் சாமியார் பாஜகவின் பிரக்யா சிங் தாகூர், லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வென்று எம்பியானார். இவர் எந்த பொதுக் கூட்டத்தில் பேசினாலும் வன்முறையை தூண்டும் வகையில் பேசுவதுதான் வழக்கம். இதனால் பாஜக தலைமையே அதிருப்தி அடைந்து இவரை ஓரம்கட்டியும் வைத்தது.


அதேநேரத்தில் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு விசாரணையும் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்தன. இவ்வழக்கில் மே 8-ந் தேதி தீர்ப்பளிக்கப்பட உள்ளது.


இந்த நிலையில் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் தீர்ப்புக்கு முன்னதாக தேசிய புலனாய்வு ஏஜென்சி NIA, எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்தது. அதில் பாஜக முன்னாள் எம்பி பிரக்யா சிங் தாக்கூர் உட்பட 7 குற்றவாளிகளுக்குமே தூக்கு தண்டனை- மரண தண்டனை விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரசியல் செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *