இந்திய ராணுவத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு: ₹1.77 லட்சம் வரை சம்பளம் – பொறியியல் பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
இந்திய ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்குச் சேவையாற்ற விரும்பும் இளைஞர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. ராணுவத்தின் எஸ்எஸ்சி (SSC – Short Service Commission) பிரிவில் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் அல்லாத காலிப் பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியிடங்கள் விவரம்:
மொத்தம் 380 பணியிடங்கள் இந்த ஆட்சேர்ப்பு மூலம் நிரப்பப்பட உள்ளன. அதன் விவரங்கள் வருமாறு:
- எஸ்எஸ்சி 67 (தொழில்நுட்பம்) ஆண்கள்: 350 பணியிடங்கள்.
- எஸ்எஸ்சி 67 (தொழில்நுட்பம்) பெண்கள்: 29 பணியிடங்கள்.
- எஸ்எஸ்சி டபிள்யூ டெக்-67: 01 பணியிடம்.
- எஸ்எஸ்சி டபிள்யூ (தொழில்நுட்பம் அல்லாத பிரிவு): 01 பணியிடம்.
கல்வித் தகுதி:
- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் துறை சார்ந்த பிரிவில் பி.இ (B.E) அல்லது பி.டெக் (B.Tech) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- பொறியியல் படிப்பின் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.
- தொழில்நுட்பம் அல்லாத பிரிவிற்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Degree) முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ₹56,100 முதல் ₹1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும். இதுமட்டுமின்றி ராணுவ விதிகளின்படி இதர சலுகைகளும் கிடைக்கும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுள்ள ஆர்வமுள்ள இளைஞர்கள் இந்திய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
