
நியூ இந்தியா – அமெரிக்கா CHATGPT, கூகுள் GEMINI, சீனா DEEPSEEK, இந்தியா COW URINE
உலகமே மிக வேகமாக செயற்கை நுண்ணறிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் மோது இந்தியாவில் மட்டும் மாட்டு கோமியமும், பாபா ராம்தேவ்களும், ஜக்கி வாசுதேவ்களும், கும்ப மேளா மரணங்களும், ராமர் கோவில் கதைகளும் பேசுபொருளாக மட்டுமில்லாமல் வாழ்வியல் முறையாகவும் இருந்து வருகிறது
இது எப்படி சாத்தியம் ?? இந்தியாவை ஒரு நாடாக பார்ப்பதைவிட துணை கண்டமாக பார்த்தால் இதற்கு பதில் கிடைக்கும். புவியியல் சார்ந்த நிலம், கலாச்சாரம், பன்முகத்தன்மை என்று காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம்.

இதையும் தாண்டி மதமும் சாதியும் ஒன்றோடு ஒன்று பிண்ணி பிணைந்து சனாதன வேடமிட்டு அரசியலோடு கலந்து நம்மை அடுத்தகட்ட நகர்வுகளுக்கு போகாமல் தடுக்கிறது.
இந்தியாவில் அறிவியல் கண்டுபிடிப்புகள், தொழில்நுட்ப வளர்ச்சிகள் இல்லை என்கிற வாதத்தை முன்வைக்கவில்லை. ஆனால் நமக்கிருக்கும் மனித வள ஆற்றல், எண்ணிக்கை அளவீட்டை கணக்கில் கொண்டால் நாம் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிகளில் நம்மை போல மக்கள்தொகை கொண்ட சீனாவை காட்டிலும் மிக மிக மிக குறைவான அளவிலே இருப்பதை புரிந்து கொள்ள முடியும்.
DeepSeek என்னும் சீன செயற்கை நுண்ணறிவு செயலி தான் உலகின் தற்போதைய பேசுபொருள். சீன கண்டுபிடிப்புகளை கிண்டல் கேலி செய்வது பொது புத்தி, ஆனால் அதற்கு நேரெதிராக DeepSeek செயலி உலகை, உலகின் வர்த்தகத்தை புரட்டி போட்டிருக்கிறது
அமெரிக்காவில் முன்னணி நிறுவனங்கள் வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சியை சந்திக்க இந்த DeepSeek ஒரு முக்கிய காரணம்
இப்படி உலகிற்கே சவால் விடும் அளவிற்கு ஒரு கண்டுபிடிப்பை அண்டை நாடான சீனா தரும் போது நம்மால் ஏன் முடியவில்லை என்று ஒரு இந்தியனாக ஆதங்கம் நம்மில் பலருக்கும் உண்டு
இந்தியாவில் மதம் என்பது அரசியலோடு கலந்து நம்மை அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு முன்னேற விடாமல் தடுப்பது “பாசிசம்”
பாசிசம் என்றால் வேறொன்றும் இல்லை “பார்ப்பனிய மேலாதிக்கம்”. நாம் செயற்கை நுண்ணறிவு பற்றி பேசி ஆதங்கபட்டால் சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி மாட்டு மூத்திரத்தின் பெருமைகளை பேசி நம்மை கற்கால்த்திற்கு அழைத்து செல்வது தான் “பாசிசம்”. அதற்கும் ஶ்ரீதர் வேம்பு போன்ற பார்ப்பன அடிவருடிகள் கொம்பு சீவி விடுவது தான் இவர்களை மேலும் இப்படி பேச தூண்டுகிறது.
இதற்கு முன்னோடி நமது நாட்டின் பிரதமர் அறிவியல் பற்றி பேசாமல் மூட நம்பிக்கை விஷயங்களை பேசி மனித உடலில் யானை தலை வைக்கும் முறை தான் “பிளாஸ்டிக் சர்ஜரி” என்று விநாயகர் சதுர்த்தி பண்டிகையை ஊக்குவித்தது.
மறுபுறம் கும்ப மேளாவிற்கு மக்கள் முந்தியடித்து கொண்டு போயி கூட்ட நெரிசலில் 31 உயிர்கள் பறிபோனது. இப்படி நாம் பழைய பெருமைகளை, போலி அறிவியலை, பிற்போக்கு கருத்தியலை பேசி நாட்டை சமகால விஞ்ஞான வளர்ச்சிக்கு பழக்காமல் பழமைவாதம் பேசினால் நம்மால் மாட்டு மூத்திரம், மாட்டு சானம் தாண்டி எதையும் சிந்திக்க முடியாது.

அமெரிக்கா CHATGPT, கூகுள் GEMINI, சீனா DEEPSEEK, இந்தியா COW URINE இது தான் இன்றைய எதார்த்தம். அறிவியலையும் விஞ்ஞான வளர்ச்சிகளையும் வளர்த்தெடுக்காத நாடு முன்னேற்றம் அடையாது என்பதை எந்த மேதையும் சொல்ல தேவையில்லை, பாமரனுக்கும் இது தெரியும். ஆனால் அவர்களை அப்படி இயங்க விடாமல் இருப்பது பாசிசம் என்கிற “பார்ப்பனிய மேலாதிக்கம்” மட்டுமே.