புர்க்கினா பாசோவின் முன்னாள் நாய்கன் தோழர் தோமசு இசிடோரே நோயல் சங்காராவின் தத்துவ தன்மைகளை, வழிமுறைகளை பின்பற்றி, ஒரு புதிய நம்பிக்கை, ஒரு கசையாக உருவாகி வெற்றி நடை போடுகிறார் தோழர் இப்ராஹிம் ட்ரொரே.
தோமசு சங்கராவை போலவே மிக இளம் வயதில் ராணுவத்திற்கும் அரசு அதிகாரத்திற்கும் வந்து விட்டார். இன்னும் சொல்லப்போனால், வேறு 33 வயதில் புர்க்கினா பாசோவின் ராணுவ புரட்சியின் மூலம் அதிபராக வந்துவிட்டார். சமகால அரசியல் உலகில் மிக இளமையான தலைவர், அதிபர் என்ற பெருமையை இவர் அடைந்துவிட்டார்.
அந்த நாட்டு மக்கள் இவரை ஒரு ராணுவ தளபதியாக காணவில்லை. அதற்க்கு இவரின் செயல்பாடுகளே காரணம். உலகவில் அதிகமான தங்க சுரங்கள் உள்ள நாடு புர்க்கினா பாசோ ஆனால் ஒரு பொட்டு தங்கம் கூட அந்த நாட்டின் கஜானாவில் இல்லை ! அவை அனைத்தும் புர்க்கினா பாசோவை காலணி படுத்தி வைத்து இருந்த பிரான்ஸ் நாட்டின் கஜானாவில் இருந்தது.
பிரிட்டிஷ் நம் இந்திய துணை கண்டத்தில் இருந்து வெளியேறினாலும், பிரிட்டிஷ் – -பார்ப்பன – பனியா கூட்டமைப்பின் மூலம் இந்நாட்டு முதலாளிகளும் வெளிநாட்டு முதலாளிகளும் இங்கிருக்கும் வளங்களை சுரண்டுவது போல, அந்த நாட்டில் இருந்த சில சுயநல கும்பல் மூலம் அந்த நாட்டு தங்கம் மற்றும் பிற வளங்கள் பிரான்ஸ் நாட்டுக்கு தாரை வார்க்கப்பட்டது.
ஆட்சிக்கட்டில் அமர்ந்தவுடன், அந்த சுரங்கங்கள் அனைத்தையும் நாட்டுடைமை ஆக்கினார் தோழர் இப்ராஹிம் ட்ரொரே. பின்காலனி துவ தொடர்ச்சியாக இருந்த பிரான்ஸ் நாட்டு ராணுவத்தை தனது நாட்டில் இருந்து அப்புறப்படுத்தினார். அதோடு நின்று விடாமல், தனது நாட்டு ராஜிய உறவை பிரான்ஸ் மற்றும் அமெரிக்க நாடுகளிலிருந்து விலக்கி ரஷ்யா சார்பை கையில் எடுத்தார்.
தன் நாட்டில் தொழில் தொடங்க விரும்பினால் முக்கால்வாசி பங்கை தன் நாட்டுக்கு வழங்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பித்தார்.
மக்களுக்கு ஆயுதங்கள் மூலம் வெற்றி பெற வைப்பது விட, சுயமரியாதையும் அறிவும் இருந்தால் மட்டுமே உண்மையான விடுதலையை பெற முடியும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையை கொண்டிருப்பவர் தோழர் இப்ராஹிம் ட்ரொரே. அதனால் மக்களுக்கு இலவச கல்வி, வேலைவாய்ப்பு, உள்நாட்டு உற்பத்தி போன்றவற்றை முடுக்கிவிட்டார்.
இவற்றிற்கெல்லாம் மகுடம் வைத்தது போல, தன் நாட்டில் காம இச்சைகளை தூண்டும் படங்களுக்கு அனுமதி இல்லை என்ற விதிமுறையை அமல்படுத்தினார்.
நீங்கள் எந்த மதத்தை சார்ந்தவர்களாகவும் இருக்கலாம், ஆனால் அதன் சடங்குகளை உங்கள் வீட்டிற்குள் வைத்துக் கொள்ளுங்கள். மதம் கடந்து இந்த நாட்டின் தேசியத்திற்காக உழைக்க வாருங்கள் என்று அழைத்ததன் மூலம், அந்த நாட்டில் ஏகாதிபத்தியங்கள் மூலம் நடத்திவரப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு சிம்ம சொப்பனாக விளங்கி வருகிறார்.
அந்த நாட்டு மக்கள் அவரை இரண்டாம் தோமசு சங்கரா இன்றைய கருத்து தொடங்கிவிட்டனர்.
உண்மையான மனிதனின் உழைப்பு ஒரு எல்லைக்குள் சுருங்கி விடாது இன்று விடயத்தில் தோழர் இப்ராஹிம் அவர்களும் விதிவிலக்கல்ல. ஆப்பிரிக்கா கண்டம் முழுக்க அவரது புகழ் பரவத் தொடங்கியுள்ளது. இளைஞர்களும் அவருக்குப் பின்னால் அணி திரள ஆரம்பித்து உள்ளனர்.
ஒரு ஏக ஆப்பிரிக்க தேசியத்தை உருவாக்கி அதன் மூலம் ஏகாதிபத்தியங்களில் சுரண்டல்களில் இருந்து விடுதலை பெற்று, தங்களுக்கே உரிய பண்பாட்டு கௌரவத்தை மீட்டெடுத்து, ஒரு புதிய புசார் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று தற்போது ஆப்பிரிக்காவில் உள்ள மூன்று நாடுகளை ஒன்றிணைத்துள்ளார்.
ஆசிய நாடுகளில் சீனாவின் அதிதீவிர ராஜதந்திரத்தால் ஏற்கனவே தனது இருப்பை இழந்து வருகிறது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள்.
இந்நிலையில், தோழர் இப்ராஹிம் ட்ரொரே அவர்களின் இந்த வளர்ச்சி மேற்கத்திய நாடுகளுக்கு மிகப்பெரிய தலைவலியை கொடுத்துள்ளது. ஒருவேளை தோழர்
இப்ராஹிம் ட்ரொரே அவர்களின் முயற்சி வெற்றி பெற்றால், உலகளாவிய அரசியல் பெரும் மாற்றத்தை சந்திக்கும் என்பதில் இரு வேறு கருத்து இருக்க முடியாது.
தோழர்.நெய்வேலி அசோக்
பொதுச் செயலாளர்
தோழர் களம்