பொங்கல் தொகுப்பில் மிஸ்ஸான ரூ.1,000; செல்லூர் ராஜூ சொல்லும் ரூ.30,000 கணக்கு சரியா? – Fact Check
Politics

பொங்கல் தொகுப்பில் மிஸ்ஸான ரூ.1,000; செல்லூர் ராஜூ சொல்லும் ரூ.30,000 கணக்கு சரியா? – Fact Check

Jan 2, 2025
  • செல்லூர் ராஜு சொல்லும் கணக்குப்படி இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பில் ரூ.30,000 கொடுத்திருக்க வேண்டுமா… சின்ன Fact Check பாக்கலாமா?

‘என்னது இந்த வருச பொங்கல் தொகுப்புல 1,000 ரூபா இல்லையா?’ என்பது தான் தற்போது மக்களுக்கு இருக்கும் அதிர்ச்சி லிஸ்டில் டாப்பில் உள்ளது.

கடந்த ஆண்டு, ‘கொள்முதல் விலை அதிகமாக உள்ளது’ என்று பொங்கல் தொகுப்பில் முந்திரி, திராட்சை மிஸ் ஆனது. இந்த ஆண்டு, ‘நிதி சுமை’ என்று பொங்கல் பண்டிகை சந்தோஷங்களில் ஒன்றான 1,000 ரூபாய் மிஸ் ஆனது மக்களை ‘வருத்தம்பா’ மோடில் தள்ளியுள்ளது.

இந்த நிமிடத்தில் கொஞ்சம் பின்னோக்கி செல்வோம்…

2024

2023

2022

2021 ஜனவரி மாதம்…

பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, வேட்டி சேலை அடங்கிய பொங்கல் தொகுப்புகளுடன் ரூ.2,500 கொடுக்கப்பட்டது. இது தான், பொங்கல் தொகுப்பு வரலாற்றிலேயே கொடுக்கப்பட்ட அதிக தொகை. ஒருபக்கம், ‘இது தேர்தலுக்காக மக்களுக்கு செய்யும் தாஜா’ என்று கூறப்பட்டாலும், இன்னொரு பக்கம் இப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “கொரோனாவால் உணவு மற்றும் மருந்து இன்றி மக்கள் தவித்த நேரத்தில், ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் குறைந்தபட்சம் ரூ.5,000-மும், அதிகபட்சம் ரூ.10,000-மும் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். ஆனால், அப்போது தராமல் இப்போது கொரோனாவைக் காரணம் காட்டி, ‘2,500 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கப்படும்’ என்று அறிவித்துள்ளார். இப்போது 2,500 ரூபாய் ‘பொங்கல் பரிசாகவாது கிடைக்கிறதே’ என்று மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறியிருந்தார்.

ஆனால், இப்போதைய நிலைமையை பார்த்தால் அப்போதைய எதிர்க்கட்சி தலைவர், இப்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் பொங்கல் பரிசாக ‘1,000 ரூபாய் கூட கிடைக்கவில்லை’.

இதுக்குறித்து நேற்று மதுரையில் பேசியுள்ள முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “அ.தி.மு.க ஆட்சியில் பொங்கல் தொகுப்புடன் 2500 ரூபாய் கொடுத்தோம். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் 5000 ரூபாய் வழங்க வேண்டும் என்றார். அப்படிப் பார்த்தால் இன்றைய மதிப்பில் 30 ஆயிரம் ரூபாய் வருகிறது. எனவே இந்த அரசு பொங்கல் பரிசு தொகுப்புடன் 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

‘4 ஆண்டுகளில் 6 மடங்கா?’ என்று செல்லூர் ராஜூ கூறியதை பணவீக்கம் அடிப்படையில் கணக்கு போட்டு பார்த்தோம். இந்தியாவின் சராசரி பணவீக்கம் அளவு 7 சதவிகிதம். இதை வைத்து பார்த்தால், இப்போது ஸ்டாலின் அரசு பொங்கல் பரிசு தொகுப்பாக 6,554 ரூபாய் தந்திருக்க வேண்டும்.

இந்த நான்கு ஆண்டுகளில் பணவீக்கம் தோராயமாக 50% வளர்ந்திருந்தால் மட்டுமே, ரூ.30,000 தர வேண்டியதாக இருக்க வேண்டும்.

`செல்லூர் ராஜூ சொன்ன கணக்கில் தவறு இருக்கலாம். ஆனாலும், பொங்கல் பரிசுத் தொகைக்காக குரல் கொடுக்கிறார் என்பது ஆறுதலான விஷயம்’ என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *