
இந்நிய டூடேவின் சர்வே ரிசல்ட், திமுக-காங்கிரஸ் கூட்டணி மீண்டும் மிகப்பெரிய வெற்றி பெறும் நிலை
இந்தியாவின் முன்னனி பத்திரிகை நிறுவனமான “இந்நிய டூடே”, இந்தியா-“Cvoter Mood of the Nation” (MOTN) என்னும் தேர்தல் கருத்து கணிப்யை நடத்தி முடித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளில், தேர்தல் இன்று நடக்கும் பட்சத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி, தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் அபார வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் பாஜக,அதிமுக போன்ற பிரதான கட்சிகள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

2024 மக்களவைத் தேர்தலிலும் தமிழகத்தில் பாஜக சிறிதும் செல்வாக்கை காணவில்லை. மாநிலத் தலைவராக இருக்கும் அண்ணாமலை தீவிர பிரச்சாரம் செய்திருந்த போதிலும், தமிழக அரசியல் நிலையை மாற்ற அவரால் முடியவில்லை.
இந்த கருத்துக் கணிப்பு 2025 ஜனவரி 2 முதல் பிப்ரவரி 9 வரை நடத்தப்பட்டது. மொத்தம் 1,25,123 மக்களவைத் தொகுதி வாக்காளர்கள் இதற்குப் பதிலளித்துள்ளனர். புதிய நேர்காணல்கள் மட்டுமல்லாமல், நீண்ட காலமாக நடத்தப்பட்ட கணிப்புகளின் தரவுகளும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

INDIA கூட்டணிக்கு வாக்கு விகிதம் 52% ஆக உயர்வு
கணிப்பின் படி, INDIA கூட்டணி தனது வாக்கு விகிதத்தை 5% அதிகரித்து 52% ஆக உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2024 மக்களவை தேர்தலில் 18% வாக்குகளை பெற்ற பாஜக, சிறிய அளவிலான முன்னேற்றத்துடன் 21% வாக்குகளை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அதிமுகவின் வாக்கு விகிதம் 23% இலிருந்து 20% ஆக குறையும் என கணிப்பு தெரிவிக்கிறது.
2024 மக்களவைத் தேர்தலில், திமுக 22 தொகுதிகளை வென்று, காங்கிரஸ் 9 தொகுதிகளை கைப்பற்றியது. சிறிய கட்சிகள் மீதமுள்ள தொகுதிகளில் வெற்றி பெற்றன. பாஜக மற்றும் அதிமுக – இருவரும் ஒரே ஒரு தொகுதியிலும் வெற்றி பெற முடியாமல் தோல்வியைச் சந்தித்தன.
பாஜகவிற்கு வெற்றிக்கான ஒரே வழி – பெரிய கூட்டணி! விஜய் முக்கியக் காரணி?
இதற்கிடையில், தமிழக அரசியலில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில், பிரபல நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். தமிழக அரசியலை நீண்ட காலமாக ஆட்சி செய்துள்ள இரண்டு திராவிடக் கட்சிகளுக்கு (திமுக, அதிமுக) போட்டியாக விஜய் களம் இறங்கியுள்ளார்.
அரசியல் நிபுணர்கள், பாஜக வெற்றி பெற வேண்டும் என்றால் அதிமுகவுடன் மட்டும் அல்லாது, விஜயின் கட்சியுடனும் கூட்டணி அமைக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.
அரசியல் ஆய்வாளர் ரஜத் சேத்தி,
“பாஜக 20% வாக்கு விகிதத்தை எட்டியுள்ளது, இது ஒரு முக்கிய கட்டம். ஆனால், அதைக் கடந்து திமுகவுக்கு எதிராக போட்டியிட, மிகப்பெரிய கூட்டணியை உருவாக்க வேண்டும். இதுவே பாஜகவிற்கு வெற்றிக்கான ஒரே வழி” என கூறினார்.
அதேவேளை, திமுக கடுமையான எதிர்ப்புகளை (anti-incumbency) எதிர்கொண்டு வருகிறது என்றும், ஆட்சியில் ஊழல் புகார்கள் மற்றும் நிர்வாக குறைகள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், முதல்வர் மு.க. ஸ்டாலினின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும், அவருடைய மகன் உதயநிதி அரசியலில் அதிக பொறுப்புகளை ஏற்க தொடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
CVoter நிறுவனர் யஷ்வந்த் தேஷ்முக்,
“விஜய், தேசிய அரசியல் மட்டத்தில் பெரிய தாக்கம் இல்லாவிட்டாலும், தமிழக அரசியலில் மிக முக்கியமானவராக மாறி வருகிறார். எதிர்க்கட்சிகளின் வாக்கு பங்கீடு அதிகரிப்பதால், இது NDA கூட்டணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்துகிறது” என கூறினார்.
மக்களவைத் தேர்தலில் பாஜகவிற்கு வெற்றிக்கான வாய்ப்பே இல்லை என கணிப்பு தெரிவிக்க, 2026 சட்டமன்ற தேர்தலில் விஜயின் அரசியல் பயணம் ஒரு முக்கியத் திருப்பமாக அமையலாம் என்பதையும் அரசியல் வல்லுநர்கள் கணிக்கின்றனர்.