மார்புக்கச்சை உள்ளாடையும் கலாச்சார காவலர்களும் :
Opinion

மார்புக்கச்சை உள்ளாடையும் கலாச்சார காவலர்களும் :

Feb 5, 2025

சில நாட்களுக்கு முன்பு கலாட்டா மீடியா ( Galatta Media) என்ற இணையவழி சேனலில் ஒரு பெண் பெண்கள் உள்ளாடையான  மார்புக்கச்சை ( brassiere / Bra) பற்றி விளக்கம் கொடுத்து, எந்த வகையான 
மார்புக்கச்சையை யார் பயன்படுத்தலாம் என்றெல்லாம் விளக்கி கொண்டு இருந்தார். இத்தனை ஆங்கிலத்தில் ” Try on haul” என்று குறிப்பிடுவர். நவீன சந்தைப்படுத்தல் முறையில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு முறை இது. வெறுமனே ஒரு பெண் ஒரு மார்புக்கச்சை அணிந்து விளம்பரம் செய்வதை விட, ஒருவர் அதை அணிந்து காண்பித்து, அதன் சாதக பாதம் என்ன, விலை ஒப்பீடு போன்றவை இந்த சந்தைப்படுத்தல் கூறுகளில் அடங்கும்.

இப்போது விடயத்திற்கு வருவோம். அந்த காணொளி கீழே இருந்த கமென்ட் செக்சன் உள்ளே சென்றால், இந்த கலாச்சார காவலர்கள் என்பவர்கள் அந்தப் பெண்ணை பேச கூடாத வார்த்தைகளை பயன்படுத்தி பேசி, இந்திய பிரோட்காஸ்டிங் ஆயத்தை எல்லாம் tag செய்து, இதை தடை செய்ய வேண்டும் என்று புலம்பினர்.

இந்த கலாச்சார காவலர்கள் வீட்டு பெண்கள் எல்லாம் இந்த மார்புக்கச்சை அணிவதில்லையா, mainstream media என்று சொள்ளபடுவதில் எல்லாம் இந்த பெண்களுக்கு மார்புக்கச்சை விளம்பரமும், ஆண்களுக்கு முக்கால் நிர்வாணமாக உள்ளாடை விளம்பரங்கள் வருவதில்லையா ? அப்படியே அவர்கள் அதை பார்த்துவிட்டாள் எதிர் பாலின நபர் மீது பாய்ந்து விடுவார்களா, திருக்கோவில்களில் சிலைகள் ஆடை இல்லாமல் இல்லையா? காம சிலைகள் இல்லையா? யோனி பூஜை, குதிரையுடன் உறவுகொண்டு பிறந்த ராமன் இல்லையா ? கோபியர்கள் குளிக்கும்போது எட்டி பார்த்து அவர்கள் மேலாடையை களவாடிய கண்ணன் இல்லையா? போன்ற கேள்விகள் நமக்கு எழும்புகிறது.

இன்னொரு நிதர்சன உண்மை என்னவென்றால், இந்த மார்புக்கச்சை என்ற உள்ளாடையில் அமிழ்ந்த வகை,முழு கோப்பை வகை, பால்கோநேட்டே வகை, திரை வகை போன்றவற்றில் எதை தனக்கு பயன்படுத்த வேண்டும் இன்பத்தில் பத்தாண்டுகளுக்கு முன்பு வரை கூட நமது பெண்களுக்கு சரியாக தெரியாது. இப்பொழுது உள்ள பெண்களுக்கு இணையதளம் மூலம் இந்த தெளிவு ஓரளவுக்கு கிடைத்துள்ளது என்று நம்பலாம்.

இன்னும் இதில் உள்ள லிஞ்சரி, பிக்கினி, டெடி வியர், ஸ்டாகிங்ஸ், பேபி டால் உடுத்தி, ஹனிமூன் வியர், போன்ற விடயங்கள் எல்லாம் நம் நாட்டுப் பெண்களில் நான்கில் ஒரு பங்கு கூட தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை அப்படியே தெரிந்திருந்தாலும் அதை பயன்படுத்த வாய்ப்பில்லை.

நிலமை இப்படி இருக்க,  இந்தியாவில் இதனுடைய சந்தை பங்கு எவ்வளவு தெரியுமா ?

டெக்னோபாக் என்ற ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையின்படி, இந்தியாவின் மொத்த ஆடை சந்தையில் 8 சதவீதமாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பெண்களுக்கான உள்ளாடை  2016 ஆம் ஆண்டில் ரூ.16,259 கோடி மதிப்புடையதாகவும், 2021 ஆம் ஆண்டில் ரூ.31,306 கோடியாகவும், 2026 ஆம் ஆண்டில் ரூ.60,277 கோடியாகவும் இருக்கும்.

அடேயப்பா, மலைபோல உள்ளது இல்லையா ?

இந்த கலாச்சார காவலர்கள் என்பவர்கள் என்ன செய்கிறார்கள் ? நான்கில் ஒரு பகுதியாக இருக்கக்கூடிய பணக்கார வர்க பெண்களும், பார்ப்பன பனியா, படித்த மேல் தட்டு பெண்கள் மட்டுமே இவை அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ளும் ஒரு சூழலையும்,

மாடலிங் என்ற தளத்தில் எக்காரணத்தைக் கொண்டும் நம் பெண்கள் தலைசிறந்து வரக்கூடாது என்ற கோணத்தையும் நிறுவ முயற்சிக்கிறார்கள்.

இன்றளவும் இந்த மாடலிங் தொழிலில் ஷெட்டி, கப்பூர், பிராமின் போன்ற உயர் வகுப்பு பெண்களும், வெள்ளை தோல் உடைய இந்திய பெண்களுமே ஆதிக்கம் செலுத்தி வரும் நிலை உள்ளது.

இந்த கலாச்சார காவலர்கள் என்று கும்பல் செய்ய நினைப்பதெல்லாம், எங்கே பெண்கள் தங்களது அந்தரங்க விடயங்களை முழு சுதந்திரத்துடன் பகிரங்கமாக பேச ஆரம்பித்து விடுவார்களோ என்பதும், எக்காரணத்தைக் கொண்டும் தென்னிந்தியாவிலிருந்து ஒரு கருப்பு நிற பெண் மாடலிங் அழகியாக வந்து விடக்கூடாது என்பதிலும், மலை போல உள்ள இந்த சந்தை மதிப்பில் ஒரு சாமானிய வீட்டுப் பெண்ணோ அல்லது கருப்பு நிற இந்திய பெண்ணோ வந்து விடக்கூடாது என்பதிலும் மிகத் தெளிவாக இருக்கிறார்கள் என்பது நிதர்சனம்.

1930களிலே, கற்பு, மாதவிடாய், திருமணம், பாலியல்  போன்ற விடயங்களை சர்வ சாதாரணமாக மேடையில் பேச வைத்தது பெரியாரின் சுயமரியாதை இயக்கம்.
ஆனால் இன்று அந்தப் பண்பாட்டு பிரச்சாரம் இல்லாத ஒரே காரணத்தால், இந்த கலாச்சார காவலர்களின் படையெடுப்பு, பெரும் பிரச்சனையாக மாறிக் கொண்டிருக்கிறது.

இவற்றையெல்லாம் அணுக அல்ல, யோசிக்கவும் கூட இந்த பழமை வாத பெரியாரிய தலைவர்கள் தயாராக இல்லை என்பது வேதனையிலும் வேதனை

– நெய்வேலி அசோக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *