அமெரிக்க ஒப்பந்தம்: “மேக் இன் இந்தியா” கனவு என்னானது? – காங்கிரஸ் கட்சி அடுக்கடுக்கான கேள்விகள்!
புது தில்லி | பிப்ரவரி 3, 2026: இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) பக்கம் வழியாக மத்திய அரசுக்குக் கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
1. “மேக் இன் இந்தியா” திட்டத்திற்கு ஆபத்தா?
அமெரிக்கப் பொருட்களுக்கு எதிராக இந்தியா விதித்துள்ள வரிகளை ‘பூஜ்ஜியம்’ (Zero Tariff) ஆக்க ஒப்புக்கொண்டுள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார். இது குறித்து காங்கிரஸ் எழுப்பியுள்ள கேள்விகள்:
- இறக்குமதி அதிகரிப்பு: அமெரிக்காவிலிருந்து அதிகப்படியான பொருட்கள் இறக்குமதி செய்யப்படவுள்ள நிலையில், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ (Make in India) என்ற முழக்கம் என்னானது?
- உள்நாட்டு உற்பத்தி: அமெரிக்கப் பொருட்கள் தடையின்றி உள்ளே வந்தால், நம் நாட்டுச் சிறு மற்றும் குறுந்தொழில்கள் (MSMEs) என்னவாகும்?
2. ரஷ்யா எண்ணெய் நிறுத்தமும் – இந்தியாவின் தன்னாட்சியும்:
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தப் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
- நிபந்தனைக்கு ஒப்புதலா?: அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிடமிருந்து அதிக விலைக்கு எண்ணெய் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுமா?
- வெளியுறவுக் கொள்கை: இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை முடிவுகளை அமெரிக்கா தீர்மானிக்கிறதா? என காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
3. விவசாயிகளின் நலன் கேள்விக்குறி:
அமெரிக்க விவசாயப் பொருட்களுக்காக இந்தியச் சந்தையைத் திறப்பது குறித்து டிரம்ப் பேசியுள்ளார்.
- விவசாயிகள் பாதுகாப்பு: குறைந்த விலையிலான அமெரிக்க விவசாயப் பொருட்கள் இந்தியச் சந்தையை ஆக்கிரமித்தால், இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பு எவ்வாறு உறுதி செய்யப்படும்?
4. “மொகாம்போ குஷ் ஹுவா!” – ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்:
இந்த அறிவிப்புகள் அனைத்தும் டெல்லியிலிருந்து வராமல், வாஷிங்டனில் இருந்து டிரம்ப் மூலமாகவே வருவது ஏன்? என காங்கிரஸ் சாடியுள்ளது. “மொகாம்போ குஷ் ஹுவா” (Mogambo Khush Hai) என்ற திரைப்பட வசனத்தைக் குறிப்பிட்டு, பிரதமர் மோடி அமெரிக்க அதிபரிடம் பணிந்துவிட்டதாக (Capitulated) ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.
