“தேர்தலை மனதில் வைத்தாவது அறிவிப்புகள் வருமா?” – முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!
Tamilnadu

“தேர்தலை மனதில் வைத்தாவது அறிவிப்புகள் வருமா?” – முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!

Feb 1, 2026

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள சூழலில், தமிழகத்திற்கான நீண்டகாலக் கோரிக்கைகளை முதல்வர் பட்டியலிட்டுள்ளார்.

முதல்வர் முன்வைத்துள்ள முக்கியக் கோரிக்கைகள்:

  1. கல்வி நிதி (₹3,548 கோடி): மத்திய அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் படிப்புக்கான கல்வி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
  2. மெட்ரோ ரயில்: கோவை மற்றும் மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு முறையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
  3. ஜல் ஜீவன் திட்டம் (₹3,112 கோடி): தமிழகம் சிறப்பாகச் செயல்படுத்தி வரும் இத்திட்டத்திற்கான நிலுவை நிதியை வழங்க வேண்டும்.
  4. நிதிப் பகிர்வு: நிதி ஆணையம் பரிந்துரைத்தபடி மத்திய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50% நிதிப் பகிர்வு அளிக்கப்பட வேண்டும்.
  5. புதிய ரயில்வே திட்டங்கள்: தமிழகத்தில் நிலுவையில் உள்ள மற்றும் புதிய ரயில்வே திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

“வழக்கமாகச் சொல்லும் திருக்குறளோடு சேர்த்து, தேர்தலை மனதில் வைத்தேனும் தமிழ்நாட்டுக்கான இந்த அறிவிப்புகள் இடம்பெறுமா? இவை மதுரை எய்ம்ஸ் போல வெறும் அறிவிப்போடு நின்றுபோகாமல், முறையான நிதியுடன் குறித்த காலத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்.”மு.க. ஸ்டாலின், தமிழக முதல்வர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *