தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென் மாநிலங்களை பழிவாங்கும் பாஜக. முன் நின்று துணிந்து போராடும் திராவிட மாடல் முதல்வர்.
2011-ல் நடைபெற்ற கடைசி மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், மக்களவை உறுப்பினர் இடங்களை மீண்டும் ஒதுக்கீடு செய்யும் தொகுதி மறுசீரமைப்பு (Delimitation ) குறித்த விவாதங்கள் இந்தியா முழுவதும் எழுந்திருக்கின்றன. நீண்ட காலமாக தொகுதி மறுசீரமைப்பு பற்றி பேசாமல் மௌனமாக இருந்த மாநிலங்கள் கூட தற்போது பேச தொடங்கியிருக்கிறது. இந்த எழுச்சிக்கு காரணம், தமிழ் நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
பாஜகவின் ஹிட்டென் அஜெண்டாவுக்கு பலியான விஜய்
சினிமாவிலும் அரசியலிலும் நுழைவதற்கு எந்த தகுதியோ திறமையோ தேவையில்லை. ஆனால் நீடித்து நிலைக்க தம்மை பயன்படுத்துகிறவர்களை உணர்ந்து சரியான நபர்களுடன் களத்தில் நிற்க வேண்டும். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய் தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான அரசியலை செய்துவரும் பாஜகவின் ஹிட்டென் அஜெண்டா அரசியல் வலையில் விழுந்திருப்பது அவரது தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் அரசியல் பயணத்தை தொடங்கி வைத்ததே
இரும்பல்ல தங்க பெண்மணி ஜெயலலிதா
1991-96 காலக்கட்டத்தில் மாதம் ஒரு ரூபாய் சம்பளம் அதாவது 5 ஆண்டிற்கு 60 ரூபாய் சம்பளம் வாங்கிய முன்னாள் முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி, இரும்பு பெண்மணி, பெண் முதல்வர், சிங்கப்பெண், தனி ஆளாக வந்து வெற்றி, ஆண்கள் மத்தியில் தனியொரு பெண்ணாக வெற்றி, ஆணாதிக்க சமுதாயத்தில் ஒரு பெண் என்று முக்கிய பேசுபொருளாக இருந்த A1 குற்றவாளி ஜெயலலிதா சொத்து
மத்திய அரசின் கட்டாய மொழிதிணிப்புக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் -தலைவர்கள் காரசார பேச்சு
சென்னையில் மத்திய அரசின் கட்டாய மொழி திணிப்புக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பலரும் சிறந்த உணர்வுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம் சென்னை பாரிமுனையில் நடைபெற்றது, இதில் தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்களான விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர் தோழர் முத்தரசன், மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட்