BSNL-யில் அதிகாரி வேலை! ரூ.1.20 லட்சம் வரை சம்பளம் – யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விபரம்!
Jobs

BSNL-யில் அதிகாரி வேலை! ரூ.1.20 லட்சம் வரை சம்பளம் – யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விபரம்!

Feb 11, 2026

புது தில்லி: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL), 2026-ஆம் ஆண்டிற்கான நேரடி ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ‘மூத்த நிர்வாகப் பயிற்சியாளர்’ (Senior Executive Trainee – SET) பதவிக்கு மொத்தம் 120 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முக்கியத் தேதிகள்:

  • விண்ணப்பிக்கத் தொடக்க நாள்: பிப்ரவரி 5, 2026
  • விண்ணப்பிக்கக் கடைசி நாள்: மார்ச் 7, 2026 (காலை 10:00 மணி வரை)
  • விண்ணப்பத் திருத்த காலம்: மார்ச் 8 முதல் மார்ச் 15 வரை
  • ஆன்லைன் தேர்வு (CBT): மார்ச் 29, 2026 (உத்தேசமாக)

பணியிட விபரங்கள்:

  1. டெலிகாம் ஆப்ரேஷன் (Telecom): 95 இடங்கள்
  2. நிதித் துறை (Finance): 25 இடங்கள்

கல்வித் தகுதி:

  • டெலிகாம்: B.E / B.Tech (Electronics / Telecommunication / Computer Science / IT / Electrical / Instrumentation) பிரிவில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • நிதி: பட்டயக் கணக்காளர் (CA) அல்லது செலவு மற்றும் மேலாண்மைக் கணக்கியல் (CMA) முடித்திருக்க வேண்டும்.

சம்பளம் மற்றும் சலுகைகள்: தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஆரம்பத்தில் ₹24,900 – ₹50,500 (E-3 IDA Pay Scale) என்ற அடிப்படை ஊதியம் வழங்கப்படும். இதனுடன் அகவிலைப்படி (DA), வீட்டு வாடகைப்படி (HRA) மற்றும் பிற சலுகைகளைச் சேர்த்தால், மாதத்திற்குச் சுமார் ₹76,000 முதல் ₹87,000 வரை நிகரச் சம்பளமாக (In-hand Salary) கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *