டாஸ்மாக் (TASMAC) நிறுவனத்தில் ஏதேனும் நிதி முறைகேடுகள் உள்ளனவா? என்ற கோணத்தில் Enforcement Directorate (ED) தொடங்கிய விசாரணைக்கு, உச்ச நீதிமன்றம் இன்று தடை விதித்தது. மேலும், நீதிபதிகள் கருத்து தெரிவிக்கையில், ED பல்வேறு அரசியல் நோக்கங்களுடன் செயல்படுகிறது, என்றும், இது கூட்டாட்சி அமைப்பின் அடிப்படைகளை பாதிக்கக்கூடியது,”என்ற கடுமையாக விமர்சனம் கூறினர்.
இதனடிப்படையில், தமிழ்நாட்டின் மாநில அரசு தாக்கல் செய்த மனுவில், ED தனது அதிகார வரம்புகளை மீறி, மாநில நிறுவனங்களில் தலையீடு செய்வதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. அதற்கு , நீதிமன்றம் கூறியதாவது :
“ED தற்போது எல்லா துறைகளிலும் தலையீடு செய்யக்கூடிய அமைப்பாக மாறி வருகிறது, இது நம் கூட்டாட்சி அமைப்புக்கே ஒரு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.” என்று குறிப்பிட்டது .
ED, கடந்த மாதங்களில் டாஸ்மாக் நிறுவனத்தின் நிதி அறிக்கைகள், விற்பனை விவரங்கள் போன்றவற்றை சேகரித்ததோடு, அதிகாரிகளை விசாரணைக்கும் அழைத்தது. இதற்கு மாநில அரசு கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.
மேலும், இது தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது மட்டுமல்லாமல் தனிநபரின் விதி மீறளுக்கு நிறுவனத்திற்கு எதிராக குற்றம் சாட்டுவதா? என பி ஆர் கவாய் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒரு அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து அதன் செயல்பாட்டை முடக்கும் விதமாக செல்போன் கணினி பென்டிரைவ் உள்ளிட்ட அனைத்தையும் அடக்கி உள்ளனர் தனிமனித உரிமை எங்கே சென்றது எனவும் அமலாக்கத் துறைக்கு டாஸ்மார்க் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோஹட்கியும் கேள்வி எழுப்பிருக்கிறார். இதன் அடிப்படையில் இன்று அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் தடை அளித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தடை, ED அதிகாரங்கள் மற்றும் மாநில உரிமைகள் தொடர்பான மிக முக்கியமான வழிகாட்டியாக பார்க்கப்படுகிறது. இது நாடளாவிய அளவில் அரசியல் மற்றும் சட்ட வரலாற்றில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தலாம்.