தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய நிதியைத் தர மறுக்கும்ஒன்றிய அரசுக்குக் கண்டனம்! – திமுக பொதுக்குழுவில் தீர்மானம்

பிரதமர் மோடி தலைமையிலான கடந்த 11 ஆண்டுகள், பா.ஜ.க. ஆட்சியில்மக்களை மத ரீதியாகப் பிளந்து, இந்துத்துவாக் கொள்கையைநடைமுறைப்படுத்தி வருகிறது. ஒரே நாடு-ஒரே தேர்தல், ஒரே ஆட்சி மொழி, ஒரே நுழைவுத் தேர்வு, ஒரே வரி, ஒரே கல்வி என்று ஒன்றிய அரசிடம்அதிகாரத்தைக் குவித்து, மாநிலங்களின் நிதி உரிமை, வரி உரிமை, கல்விஉரிமை உள்ளிட்ட அனைத்தையும் முற்றிலுமாகப் பறித்து, தன்னாட்சி மிக்கபுனலாய்வு அமைப்புகளான சி.பி.ஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறைஆகியவற்றை எதிர்க்கட்சிகளைப் பழிவாங்குவதற்கானகைப்பாவைகளாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான நீட் தேர்வு, மதுரைஅரிட்டாப்பட்டி டங்ஸ்டன் திட்டம், மன்னார் வளைகுடா ஆழ்கடலில்எண்ணெய்க் கிணறுகள் அமைத்தல், தமிழ்நாட்டின் திட்டங்களுக்குப்போதிய நிதி ஒதுக்காமல் புறக்கணிப்பு எனத் திட்டமிட்ட வஞ்சகங்களும், ஆளுநர்களை வைத்துப் போட்டி அரசாங்கம் நடத்துதல், அரசியல் எதிரிகள்மீது வெறுப்பு பரப்புரைப் பேச்சுகளை உமிழ்தல், பொய் வழக்குகள்பாய்ச்சுதல், அரசு எந்திரங்களைச் சட்ட மீறலாகப் பயன்படுத்தி மாநிலஅரசுகளுக்கு மிரட்டல் விடுத்தல், ஒன்றிய அரசின் இலஞ்ச – ஊழல்களைஆதாரத்துடன் எதிர்த்து எழுதும், பேசும் சமூகச் செயற்பாட்டாளர்கள் மீதுபொய் வழக்குகள், சிறை போன்ற அநீதிகளுமே தொடர்வதால், இத்தகையசர்வாதிகாரப் போக்கை நடத்தி வரும் பா.ஜ.க. அரசுக்கு இப்பொதுக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறது.