பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: 26 சுற்றுலா பயணிகள் பலி – இந்தியா பதிலடி நடவடிக்கைகளுடன் தயாராகிறது, பாகிஸ்தானில் அவசர ஆலோசனை கூட்டம்
இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் அரசு இன்று அவசரமாக தேசிய பாதுகாப்பு குழு கூட்டத்தை நடத்துகிறது. பாகிஸ்தான் அதிகாரிகள் பலரை வெளியேற்ற இந்தியா உத்தரவிட்டிருக்கிறது. எனவே இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இதனை சமாளிக்க
பஹல்காம் பரிதாபம்: அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் – திருமாவளவன் கோரிக்கை!
சென்னை: பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாக பதவி விலக வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி வலியுறுத்தி உள்ளார். ஜம்மு காஷ்மீரின் பகல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து நேற்று பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 29 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
விமர்சனங்களை எதிர்கொண்ட பிறகு, மகாராஷ்டிரா அரசு இந்தியை மூன்றாம் மொழியாக கட்டாயமாக்கும் முடிவை திரும்பப் பெற்றது.
மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளில் 1-5 வகுப்புகளில் இந்தியை மூன்றாம் மொழியாக கட்டாயமாக்கும் முடிவுக்கு பெரும் விமர்சனங்களைப் பெற்றதைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா அரசு செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 22) அந்த நடவடிக்கையைத் திரும்பப் பெற்றது . “கட்டாயமானது என்ற வார்த்தை நீக்கப்படும்… மும்மொழி சூத்திரம் அப்படியே உள்ளது, ஆனால் ஒரு வகுப்பில் கணிசமான எண்ணிக்கையிலான மாணவர்கள் கோரினால் பள்ளிகள் பிற
பஹல்காம் தாக்குதலை கண்டித்து, அனைத்துக் கட்சி கூட்டத்தை கோர, பிடிபி, அரசியல் கட்சிகளுக்கு காங்கிரஸ் ஒப்புதல்
புது தில்லி: செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 22) பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர், பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர், கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பிரதமர் நரேந்திர மோடியை அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இதற்கிடையில், பாரதிய ஜனதா கட்சியின் (BJP) சத்தீஸ்கர் X பக்கம், தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின்
இன்று குரைஷி, நேற்றே அன்சாரி: மீண்டும் மீண்டும் அதே கதைகள்
கொல்கத்தா: ஏப்ரல் 20 அன்று, பாரதிய ஜனதா கட்சி எம்.பி. நிஷிகாந்த் துபே, இந்தியாவின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையரை “முஸ்லிம் ஆணையர்” என்று அழைத்தார். அசாதாரணமான மற்றும் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக , ஜார்க்கண்டில் “அதிகபட்ச எண்ணிக்கையிலான வங்காளதேச ஊடுருவல்காரர்கள்” வாக்காளர்களாக ஆக்கப்பட்டதற்கு முன்னாள் ஆணையரும் (CEC) பொறுப்பு என்று துபே கூறினார். துபேயின் வசைபாடலுக்கு ஆளான
தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் – நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!
சென்னை: பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுப்போம் என நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் தெரிவித்துள்ளார். சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது அவர் இதை தெரிவித்தார். தமிழக சட்டசபை இன்று கூடியது. அப்போது காலை 9.30 மணிக்கு கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவரான போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கேள்வி
சீனாவில் தங்க ஏடிஎம் அறிமுகம் – நகைகளை விற்பனை செய்து உடனடி பணம் பெறும் புதிய வசதி!
பெய்ஜிங்: தற்போது தொடர்ந்து தங்கம் விலை என்பது உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் தான் முதல் முறையாக சீனாவில் தங்க ஏடிஎம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த ஏடிஎம் மூலம் பழைய தங்க நகைகளை விற்பனை செய்ய முடியும். ஏடிஎம் இயந்திரத்தில் தங்க நகைகளை வைத்தால் அதன் எடைக்கு ஏற்ப பணம் என்பது பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஏடிஎம் குறித்த
ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ்நாட்டில் தமிழ் வார விழா – பாவேந்தர் பாரதிதாசன் நினைவில் விழாக்கள் நடத்த முதல்வர் அறிவிப்பு!
சென்னை: பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினத்தை முன்னிட்டு வரும் ஏப்ரல் 29 ஆம் தேதி முதல் மே 5 ஆம் தேதி வரை ஒருவாரத்திற்கு தமிழ் வார விழா கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் விதி எண் 110ன் கீழ் இந்த அறிவிப்பினை முதல்வர் வெளியிட்டார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும்
