உள்ளே நுழைந்தால் தாக்குங்கள்”: அமெரிக்காவுக்கு டென்மார்க் விடுத்த அதிரடி எச்சரிக்கை!
World

உள்ளே நுழைந்தால் தாக்குங்கள்”: அமெரிக்காவுக்கு டென்மார்க் விடுத்த அதிரடி எச்சரிக்கை!

Jan 9, 2026

கோபன்ஹேகன்: அமெரிக்கப் படைகள் கிரீன்லாந்து மண்ணில் அத்துமீறி நுழைந்தால், எந்தவித முன்னறிவிப்புமின்றித் தாக்குதல் நடத்த இராணுவ வீரர்களுக்கு டென்மார்க் அரசு முழு சுதந்திரம் அளித்துள்ளது. உலக வரலாற்றிலேயே ஒரு நேட்டோ (NATO) உறுப்பு நாடு, மற்றொரு நேட்டோ நாடான அமெரிக்காவிற்கு எதிராக இத்தகைய கடுமையான உத்தரவைப் பிறப்பித்திருப்பது இதுவே முதல்முறையாகக் கருதப்படுகிறது.

உத்தரவின் பின்னணி:

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சமீபத்தில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பிற்காக கிரீன்லாந்து தீவைத் தங்களுக்கு வழங்க வேண்டும் என்று பகிரங்கமாகத் தெரிவித்து வருகிறார். இதனை “இணைத்துக்கொள்ளும் கற்பனை” என்று விமர்சித்த டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து பிரதமர்கள், அத்துமீறல்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

“முதலில் தாக்குங்கள்”: இராணுவத்திற்கு அளிக்கப்பட்ட அதிகாரம்

டென்மார்க் நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி:

  • 1952-ஆம் ஆண்டு ஆணை: இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியிடம் சிக்கியது போன்ற சூழல் மீண்டும் வராமல் இருக்க, 1952-ல் பிறப்பிக்கப்பட்ட ஒரு அரசாணை மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
  • உடனடித் தாக்குதல்: கிரீன்லாந்தைக் கைப்பற்ற அல்லது அத்துமீறி நுழைய முயற்சிக்கும் எந்தவொரு வெளிநாட்டுப் படையினரின் மீதும், மேலிடத்து உத்தரவுக்காகக் காத்திருக்காமல் “முதலில் தாக்குங்கள்” (Shoot first) என்று இராணுவ வீரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
  • யாராக இருந்தாலும் தப்ப முடியாது: இந்தத் தாக்குதல் உத்தரவானது அமெரிக்கப் படைகளுக்கும் பொருந்தும் என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நேட்டோ அமைப்பிற்குச் சிக்கல்:

டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெடெரிக்சன் (Mette Frederiksen) பேசுகையில், “அமெரிக்கா கிரீன்லாந்தின் மீது ஒரு இராணுவத் தாக்குதலை நடத்தினால், அது நேட்டோ (NATO) அமைப்பின் முடிவாக இருக்கும்” என்று எச்சரித்துள்ளார். 2-ம் உலகப் போருக்குப் பின் உருவாக்கப்பட்ட சர்வதேசப் பாதுகாப்பு கட்டமைப்பை இந்த நடவடிக்கை சிதைத்துவிடும் என்றும் அவர் காட்டம் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *